பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 நினைவுக் குமிழிகள்-1 பண்டைய நூல்கள் எல்லாம் நூல்களின் பயனைப் பேசும்போதும் கல்வியின் பயனை எடுத்துரைக்கும்போதும் தத்துவஞானத்தின் பயனையே பேசுவதாக அமைகின்றன . கற்கை நன்றே; கற்கை நன்றே: பிச்சை புகினும் கற்கை நன்றே” என்ற அதிவீரராம பாண்டியரின் வாக்கும், அறம்பொருள் இன்பமும் வீடும்பயக்கும் புறக்கடை நல் இசை நாட்டும் உறுங் கவலொன்று உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்கில்லை சிற்றுயிர்க்கு உற்ற துணை10 என்ற குமரகுருபர அடிகளின் திருவாக்கும் இக்கருத்தின் சாயலாக அமைந்திருப்பதைக் காணலாம். இப்பொழுது இதை எழுதும் பொழுது இக்கருத்துகள் என் மனத்தில் தோன்றினாலும், நான் கல்லூரியில் பயிலுங்கால் நான் தேடிய கல்வி இகத்தை மட்டிலும் நாடியதாகவே இருந்தது ஆகவே, பெரும்பாலும் அறிவியல் நூல்களைக் கற்பதிலேயே என் நாட்டம் இருந்து வந்தது என்பதைச் சொல்லியேயாக வேண்டும். ஒருசமயம் 'அறிவியல் வரலாறு' (History of science) என்ற நூலைப் படிக்க வேண்டும்' என்று என் மனம் விழைந்தது. நூலகத்தில் இந்த நூலை வாங்கிக் கொண்டு சென்று ஒரு காலாண்டுத் தேர்வுக்குப்பின் கிடைத்த விடு முறையில் இந்த நூலைப் படிக்கப் பெரும் பயன் பெற்றேன், அறிவியல் வளர வளர மூடப்பழக்கங்கள் தேய்ந்தொழிந்த வரலாற்றை இலைமறை காய்கள் போல் இதில் காண முடிந்தது. இப்போது அதில் படித்த இரண்டு கருத்துக்களை நினைவுகூர முடிகின்றது. 9. வெற்றிவேற்கை-35 10. நீதிநெறி விளக்கம்-2