பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டப்படிப்பும் நூலகப்பழக்கமும் 413 ஒன்று : முதன் முதலில் மேல் நாட்டில் பூமியை நடுவாக வைத்து எல்லாக் கோள்களும் சுற்றுவனவாகக் கருதப் பெற்றன; கலிலியோ காலம்வரையிலும் கூட இதே கருத்து தான் நிலவியது. காப்பர்நிகஸ் காலத்தில் இக்கருத்து தலை கீழாயிற்று . கதிரவன் தான் மையமாக உள்ளான் என்றும், அவனைச் சுற்றி தான் பூமி உட்பட எல்லாக் கோள்களும் இயங்கி வருகின்றன என்னும் கொள்கை ஏற்பட்டு விட்டது. அண்டங்க ளெல்லாம் அணுவாக அணுக்கள் எல்லாம் அண்டங்க ளாகப் பெரிதாய்ச்சிறி தாயி னானும் அண்டங்க ளுள்ளும் புறம்புங்கரி யாயி னானும் அண்டங்கள் என்றாள் துணை என்பர் அறிந்த நல்லோர்.11 என்று கூறுவார் பரஞ்சோதியார். இன்னும் இந்த அண்டங் களைப் பற்றி ஆய்ந்து வருகின்றனர். சர் வில்லியம் ஜீன்ஸ் என்பார் எழுதியுள்ள 'விளங்கா வியன்உலகம்' (The Myskrious Universe) என்ற நூல் ஒருவகையாக எடுத் துரைக்கும். இந்தக் கதிரவ மண்டலத்தைப்போல் எண்ணற்ற அண்டங்கள் இருப்பதாகக் கூறுகின்றார் அந்தப் பேரறிஞர் . இதை மணிவாசகப்பெருமானும், அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட்ட விரிந்தன.1: 11. திருவிளையாடல் -பாயிரம்-செய். 6 12, திருவா. திருவண்டப்பகுதி - அடி (1-4)