பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 நினைவுக் குமிழிகள்-1 என்று கூறிப் போந்ததையும் காண்கின்றோம், இப்போது நாம் வதியும் இப்பூமண்டலமும், இதனோடு சார்ந்திருக்கும் ஏனைய கோள்களும் இவற்றின் தலைவனாம் கதிரவனும் இப்பெரிய அண்டப்படைப்பில் ஒரு சிறு அணுவென்றே சொல்லவேண்டும். மணிவாசகர் கருத்தும் இதுவேயன்றோ? நக்கபிரான் அருளால்-இங்கு நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம்; தொக்கன அண்டங்கள்-வளர் தொகைபல கோடிபல் கோடிகளாம்.! இக்கணக் கெவரறி வார்-புவி எத்தனை யுளதென்ப தியாரறிவார்! நக்கபிரான் அறிவான்-மற்று நானறி யேன்பிற நரரறியார்; தொக்கபேர் விண்டங்கள் கொண்ட தொகைக்கெல்லை இல்லையென்று சொல்லுகின்ற தக்கபல் சாத்திரங்கள்-ஒளி தருகின்ற வானமோர் கடல்போலாம் அக்கட லதனுக்கே-எங்கும் அக்கரை இக்கரை யொன் றில்லையாம் இக்கட லதனகத்தே-அங்கங் கிடையிடைத் தோன்றும் புன் குமிழிகள்போல் தொக்கன உலகங்கள்;-திசைத் தூவெளி யதனிடை விரைந்தோடும்; மிக்கதோர் வியப்புடைத் தாம்-இந்த வியன்பெரு வையத்தின் காட்சி கண்டீர்!18 என்று புதுமைக்கவி பாரதியாரின் வியன்பெரு வையத்தின் காட்சி சார்வில்லியம் ஜீன்ஸ் காட்டும் காட்சியுடன் ஒருவாறு ஒத்திருப்பதைக் காண முடிகின்றது. 13. பா.க. கோமதி மகிமை-செய் 5,6,7.