பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துன்பத்திலும் இன்பம் 415 இரண்டு : இது மூடப் பழக்கங்களும் சமயக் கருத்து களுக்கு அடிமையும் பற்றியது. ஒருசில நூற்றாண்டுகட்கு முன்னர் அறிஞர்களிடையே குதிரைக்கு எத்தனைப் பற்கள்? என்ற ஐயம் எழுந்ததாம். இந்த அறிஞர்கள் நூலகத்தில் குதிரையைப் பற்றி எழுந்துள்ள நூல்களையெல்லாம் புரட்டிப் பார்க்க முனைந்தார்கள். சாதாரண நிலையிலுள்ள ஒருவன் “ஒரு குதிரையைப் பிடித்து பற்களை எண்ணினால் தெரியுமே!” என் றானாம் மாதா கோயிலின் ஆதிக்கத்தி லுள்ள அந்த அறிஞர்கள் கிறித்தவ மத நூலுக்குப் புறம்பாகச் சிந்திக்கத் தொடங்கி விட்டானே இந்தப் பாமரன்? இவனுக்குச் சரியான தண்டனை விதிக்க வேண்டும் என்று யோசித்தார்களாம். இதிலிருந்து சமயக் கொடுமையிலிருந்து விடுபட்டு அறிவியல் வளர்ந்த வரலாற்றை அறிய முடிகின்றதன்றோ ? இவை நூலகப்படிப்பால் யான் அறிந்த செய்திகளாகும். குமிழி-54 54. துன்பத்திலும் இன்பத்திலும் தொடங்குங்கால் துன்பமாய் இன்பம் பயக்கும் மடங்கொன் றறிவகற்றும் கல்வி- நெடுங்காமம் முற்பயக்கும் சின்னீர இன்பத்தின் முற்றிழாய் பிற்பயக்கும் பீழை பெரிது. [மடம் - அறியாமை; பீழை - துன்பம்) என்ற குமரகுருபர அடிகளின் பாடல் என் மனத்தில் குமிழியிடு கின்றது. இதனை ஆழச்சிந்திக்கின்றேன். எல்லோர் வாழ்க் கைக்கும் பொருந்தும் அடிகளாரின் இந்தச் சிந்தனை என் வாழ்க்கையில் சிறப்பாகப் பொருந்துவதைப் பார்க்கின்றேன், பட்டப்படிப்பில் இறங்கியிருக்கும் பொழுது மாமனார் வீட்டுப்