பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

417 துன்பத்திலும் இன்பத்திலும்

  • துன்பத்தையும்? அதனை 'முழுமையாகப் பெற்ற பிறகு

அடையும் 'இன்பத்தையும்' ஒவ்வொருவரும் நினைந்து பார் ப் பா ர் க ள ா க , இப்போது 'மடங்கொன்று- அறியாமையைக் கெடுத்து' என்பதன் பொருள் துலக்கமடை யும். மடம் நீங்கவே அதனுள் மறைந்து கிடந்து அறிவு எழுந்தது; அங்ஙனம் எழுந்த அறிவு அதாவது, கல்விப் பயிற்சியினால் எழுந்த அறிவு-அதே பயிற்சியினால் அவ்வறிவைப் பெரிதாகவும் விரியச் செய்யும் என்பதை விளக்கும் 'அகற்றும் -விரியச் செய்யும்' என்பதன் ஆழ் பொருள் நன்கு துலங்கும். இங்ஙனம் கங். வியை ஊக்கத்துடன் கற்றுக் கொண் டிருக்கும் பொழுது பதினைந்து நாட்கொருமுறை மாமனார் வீடு சென்று பெறும் 'சிற்றின்பம்' அப்போது பெருந்துன்ப மாய்த் தோன்றும். இதனை நான் விளக்கும் போது இதன் 'கொடுமையை' என் ம ன வ வி யு ம் உணரத் தொடங்குவாள்; இதனால் நாங்கள் பெற்றுவந்த சிற்றின்பத் தில் எப்பொழுதும் 'இடையறவு' தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும், இருவரும் இதனை மனம் ஒத்து உணர்ந்து கொண்டதால்-ஒருவரையொருவர் இத்துறை யில் தெளிவாகப் புரிந்து கொண்டமையால்-எங்கள் வாழ்வு கட்டுப்பாடாகவே இருந்து வருவது இறைவனுடைய அருள் என்பதை எண்ணிப் பார்க்கும்போது வாழ்க்கையின் எத்தனையோ பேருண்மைகள் புலனாகின்றன. புனித சூசையப்பர் கல்லூரியில் சனி, ஞாயிறு என்ற வார விடுமுறை வழக்கத்தில் இல்லை. அப்படி விட்டால் ஒரு வாரத்தில் பெற்ற அறிவு நீண்ட இடை வெளியாலும், இந் நாட்களில் வாரம் முழுதும் பெற்ற அறிவு ஓரளவு மறைவதற் குக் காரணமாக அமையும் என்று கருதியமையாலும் கல்லூரி நிர்வாகம் ஞாயிறு புதன் என்று வார விடுமுறையை -27-