பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418 நினைவுக் குமிழிகள்-1 அமைத்து இந்த இடைவெளியின் நீளத்தைக் குறைத்து விட்டிருந்தது. இதனால் உளவியல் உண்மைப்படி மறக்கும் நிலை குறைந்து விட்டது. இந்த ஒழுங்குமுறையால் நான் பொட்டணம் சென்று இரண்டு நாளாவது தங்குதலில் தடை நேரிட்டது. இரண்டு நாட்களில் ஒருநாள் எண்ணெய்க் குளியல்; பகல் முழுவதும் ஓய்வு. சனி இரவு, ஞாயிறு இரவு இரண்டு நாட்கள் தங்கினால் திங்களன்று அதிகாலையில் குளியலை முடித்துக் கொண்டு திருச்சி வந்து சேர்வது பெரும் பாடாகிவிடும், அப்படி வந்தாலும் ஓரிரு பாடவேளையில் மட்டம் போடவேண்டி வந்து விடும், பெரும்பாலும் திங்கள் முதல் பாடவேளையில் கணிதப்பாடம் நடைபெறுவதாக இருக்கும். ஒரு வேளை இப்படித் தவறினால் அடுத்த நாள் பாடத்தைப் புரிந்து கொள்ள இயதாத நிலை ஏற்படும். இத்தகைய சந்தர்ப்பங்களில் நடந்த கணிதப்பாடத்தின் விவரத்தை யாராவது ஒரு மாணவன் மூலம் தெரிந்து கொள் வேன்; திங்கள் மாலையோ இரவோ அப்பாடப் பகுதியை என் அறையின் பக்கத்திலுள்ள அறையில் தங்கியிருந்த பி.ஏ. கணித மாண வர் சுப்பண்ணனிடம் கேட்டு விளக்கம் பெறுவேன். இப்படிச் செய்து கொள்வதால் அடுத்து செவ்வாயன்று நடைபெறும் கணிதப் பாடத்தைத் தெளி வாகப் புரிந்து கொள்ளமுடியும், அறிவியல் பாடச் செய்முறை (Practical) பிற்பகலே நடைபெற்று வந்தமையால், எனக்கு இது உதவுவதாக இருந்தது. எக்காரணத்தாலும் செய்முறைப் பயிற்சியை இழத்தல் கூடாது. இது தேர்வில் பாதிக்கச்செய்து விடும். இங்ஙனம் “சின்னீர இன்பத்தின்' தன்மையை நன்கு உணர்ந்து அஃது என் கல்வி வளர்ச்சியில் விளைவிக்கும் “பிழையைத் தவிர்த்துக் கொண்டேன். இப்படிக் கல்வியில் பெரும் நாட்டம் கொண்டு இடையிடையே பெறும் சிற்றின்பம்' முழுமை அடையாது, இருப்பூர் திப் (Railway journey) பயணத்தின் பொழுது பெறும் உணவு போல்