பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துன்பத்திலும் இன்பத்திலும் 419 அமைந்து விடும். இதனால் என் வாழ்நாள் முழுதும் 'இடை யறவு பட்ட அகப்பொருள் இன்பமே' எனக்குக் கிட்டுவதாக அமைந்தது. இன்ப உணர்வை - காமத்துடிப்பை-நெறிப் படுத்திய பொருளாகக் கொண்டு பாடல்களை யாத்தனர் சங்கச் சான்றோர், இதன் இன்றியாமையையும் சிறப்பினை யும் நன்கு உணர்ந்த தொல்காப்பியனார் பொருள் இலக்கணம் கண்டு அதில் முந்துற அகப்பொருள் இலக்கணத் தைப் பொருத்திக் காட்டினார். கடந்த 40 ஆண்டுகளாக அகப்பொருளில் ஆழங்கால்பட்டு பத்தாண்டுகள் அகப் பொருளைத் தமிழ் எம்.ஏ, மாணாக்கர்கட்குக் கற்பித்து 'அகத்திணைக் கொள்கைகள்' (1981) என்ற நூலையும் எழுதி வெளியிட்ட பிறகுதான் இன்பத்தைப் பற்றிய தெளிவான கருத்து ஏற்பட்டது. தலைவனும் தலைவியும் சேர்ந்து நுகர்வது 'சிற்றின்பம்' என்பதை அறிந்தேன், இருபது யாண்டுகளாக ஆழ்வார் பாசுரங்களிலும் அவர் தம் பாசுரங்களின் உரைகளிலும் ஈடுபட்ட பிறகு ஆன்மா பரமான்மாவுடன் கலப்பதைப் "பேரின்பம்' என்று அறிந்து கொள்ள முடிகின்றது. இந்த அறிவுடன்-உணர்வுடன்- இல்லற இன்பத்தை இப்போது சிந்தித்துப் பார்க்கின்றேன். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிப் படிப்பும், பின்னர் 40 ஆண்டுகள் கற்பித்த அறிவும், பல உளவியல், அறிவியல், கல்வியியல் நூல்களை ஆழ்ந்து கற்ற அறிவும் என்னைக் 'கல்விப் பருவம்', 'கல்வி கற்றல்' என்பவற்றைப் பற்றிச் சிந்திக்க வைக்கின்றன. உலகிலுள்ள உயிர்ப் பிராணிகளை யும் மனிதனையும் உற்றுக் கவனித்தால், பலவித உண்மை கள் தெரியவரும், படைப்பு ஏணியிலேயே மனிதன் உயர்ந்த உன்னத நிலையிலுள்ளான். கூர்தல் அறக்கொள்கையின் படியே (Doctrine of Evolution) மனிதன் தான் உயர்ந்த நிலையிலிருக்கின்றான். பிற உயிர்கட்கும் மனிதனுக்கும் இயல்பான தொடர்புகளே இல்லை என்று கூடச்