பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 நினைவுக் குமிழிகள்-1 சொல்லலாம். படைப்பு ஏணியின் கீழ்ப்படியிலுள்ள பிராணி களின் வாழ்க்கையெல்லாம் இயல்பூக்கங்களின் அடிப்படை யில் அமைந்துள்ளது; ஏணியின் மேற்படிக்குப் போகப் போக அவற்றின் வாழ்க்கை அறிவின் அடிப்படையில் அமைந் திருப்பதைக் காணலாம். ஏணியின் உயர்ந்தபடியில் இருக்கும் குரங்கின் வாழ்க்கை கிட்டத்தட்ட அறிவு நிலையின் அடிப் படையிலிருப்பதையும், அதற்கு மேற்படியிலுள்ள மனிதனு டைய வாழ்க்கை , முழுவ தும் அறிவின் அடிப்படையிலிருப் பதையும் அறிய முடிகின்றது. மேலே செல்லச் செல்ல உயிர்ப் பிராணிகளின் வாழ்க்கையில் இயல்பூக்கங்சளின் ஆதிக்கம் குறைந்து கொண்டே வந்து, மனிதனிடம் அவற்றின் ஆதிக்கம் மிகக் குறைவாக இருப்பதையும் காணலாம். விளக்கில் விழும். விட்டில் பூச்சிகள் தம் அநுபவத்தை மறந்து மீண்டும் விளக்கில் விழுவதையும், ஒரு தடவை நெருப்பைத் தொட நேர்ந்த குழந்தை மீண்டும் நெருப்பைத் தொட அஞ்சுவதை யும் கவனித்தால், இவ்வுண்மை நன்கு விளங்கும். கீழ்நிலை யிலுள்ள பிராணிகளுக்கும் தம் முன்ன நுபவம் பயன்படா திருப்பதும் மனிதன் தன் அநுபவ அறிவால் சூழ் நிலைக் கேற்றவாறு தன்னை அநுசரித்துக் கொள்வதும் நாம் நாள் தோறும் காணும் உண்மைகளாகும் இயல்பூக்கங்களின் குறைவைத் தவிர, மனிதனிடம் இன்னொரு சிறப்பும் அமைந்துள்ளது. உயிர்ப் பிராணி களிலேயே திமிங்கலத்தையும் யானையையும் தவிர மனிதன் தான் பெரிய மூளையைப் பெற்றுள்ளான் என்று சொல்லப் பெறுகின்றது. இயல்பூக்க நிலையிலிருந்து அறிந்து கொண்டவை யாவும் பகுத்தறிவு நிலைக்குக் கொண்டு வரப் பெற்றுப் பாகுபாடு செய்யும் தன்மையும் முன்ன நுபவத்தைப் பயன்படுத்தக் கூடிய திறனும் மனிதனிடம் இயல்பாகவே அமைந்துள்ளன,