பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துன்பத்திலும் இன்பத்திலும் 421 இதைத் தவிர, இன்னோர் உண்மையும் மனிதனிடம் அறிய முடிகின்றது ஏனைய பிராணிகளின் இளமைப் பருவத்தையும் மனிதனுடைய இளமைப் பருவத்தையும் உற்று நோக்கினால், ஏனைய பிராணிகளின் பருவத்தை விட மனிதனுடைய இளமைப் பருவம் நீடித்திருப்பது தெரிய வரும், மனிதனுடைய இளமைப் பருவம் மட்டிலும் இங்ஙனம் நீடித்திருப்பதற்குக் காரணம் என்ன? சிந்தனை செய்து பார்த்தால் சில உண்மைகள் புலனாகாமற் போகா, ஏனைய பிராணிகள் யாவும் இயல்பூக்கங்களின் அடிப்படையில் மட்டிலும் சூழ்நிலைக்கேற்றவாறு தம்மைச் சரிப்படுத்திக் கொள்ள வேண்டியிருத்தலும், மனிதன் மட்டிலும் இத்துடன் அறிவு நிலையிலும் தன்னைச் சூழ் நிலைக்கேற்றவாறு சரிப் படுத்திக் கொள்ள வேண்டியிருத்தலும் தெரியவரும். ஏனைய பிராணிகள் தம் அநுபவத்தை மட்டிலும் கொண்டு வாழ் கின்றன; ஆனால், மனிதன் தன் மூதாதையரின் அநுபவத்தை யும் கொண்டு தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டியவனாக உள்ளான். இவ்வாறு தனது மூதாதையரின் அநுபவங்களையெல்லாம் மனிதன் அறிந்து கொள்ள வேண்டு மானால் அதிகக் காலம் வேண்டுமல்லவா? கோழிக்குஞ்சு, பசுங்கன்று இவற்றின் இளமைப்பருவத்தைவிடக் குரங்குக் குட்டியின் இளமைப்பருவம் நீட்டித்தும் குரங்குக்குட்டியின் இளமைப்பருவத்தைவிட 'உர்ராங் உட்டாங்' என்ற பிராணியின் இளமைப்பருவம் அதிகமாக நீடித்தும் உள்ளன. இவை எல்லாவற்றின் இளமைப் பருவத்தைவிட மனித னுடைய இளமைப் பருவம் மிக அதிகமாக நீடித்து உள்ளது. ஏனையவற்றின் இளமைப் பருவம் நாள், வார, மாதக் கணக்கிலிருக்க, மனிதனுடைய இளமைப் பருவம் மட்டிலும் ஆண்டுகள் கணக்கில் உள்ளது. ஏனைய பிராணிகளின் குட்டிகள் சில நாட்களிலேயே பெற்றோர் உண்ணும் உணவை ஏற்கும் நிலையை அடைய மனிதக் குழந்தை