பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 நினைவுக் குமிழிகள்-1 அவ்வாறு தனது பெற்றோர் உண்ணும் உணவுகளை யெல்லாம் புசிப்பதற்குச் சில ஆண்டுகளாகின்றன, ஏனைய பிராணிகளின் குட்டிகள் சில நாட்களில் ஓடி விளையாடு கின்றன; ஆனால் மனிதக் குழந்தையால் ஓர் ஆண்டு முடிந்த பிறகு கூட நடக்க முடிவதில்லை. இரண்டாண்டுகள் முடிந்த பிறகே பேசத் தொடங்குகின்றது. மருத்துவ நியாயப்படி (Medical Jurisprudence) ஏழாண்டுகள்வரை குழந்தைதான்; சிவில் சட்டப்படி இருபத்தோர் ஆண்டுகள் முடிவுற்ற பிறகு தான் 'மேஜர்' ஆகின்றான்; அப்போது தான் கல்லூரிப் படிப்பும் முடிவடைகின்றது. இவற்றையெல்லாம் சிந்தித்து நோக்கினால் மனிதன் தன்னை மிகச் சிக்கலான வாழ்க்கைக்கு ஆயத்தம் செய்து கொள்வதற்கு இவ்வளவு காலம் வேண்டியுள்ளது என்பது தெரியவரும். தனது மூதாதையரின் அநுபவத்தையெல்லாம் தான் பெறுவதற் காகத் தான் மனிதனுடைய குழந்தைப்பருவம் நீடித்துள்ளது . தன் மூதாதையரின் அநுபவமும் தன்னோடு சமகாலத் தவர்களின் அநுபவ மும் நூல் வடிவில் காட்சியளிக்கின்றன . இலக்கியம், சமூகம், பல்வேறு அறிவியல் துறைகள், மருத்துவம், பொறியியல், புவியியல், வரலாற்றியல், வானியல் போன்ற துறைகளிலெல்லாம் மலை மலையாக நூல்கள் குவிந்துள்ளன; நாடோறும் குவிந்து கொண்டும் வருகின்றன. அண்மைக் காலத்தில் அணுவியல், தொலை யுலகச் செலவு, மின்னணுவியல் (Electronics) போன்ற துறைகள் “ஓங்கி உலகளந்துள்ளன. இவற்றையெல்லாம் நாம் கற்கும் காலத்தைத்தான் 'கல்விப் பருவம்' 'கல்வி கற்றல் பருவம்' என்றும் வழங்குகின்றோம். எல்லா வற்றையும் எல்லோரும் கற்க முடிவதில்லை. சிலவற்றைத் தனித்தனியாகக் கற்று வல்லுநர்களாகின்றோம். இந்தக் கருத்துகள் அறிவு முதிர்ச்சி பெற்ற என்னிடம் இப்போது தான் எழுகின்றன; குமிழியிடுகின்றன,