பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கலைப் பட்டத்தேர்வும் முடிவும் 423 பட்டப்படிப்பின் பொழுது இரண்டாண்டுகள் துன்பமும் இன்பமும் மாறி மாறி என் னை வந்தடைந்தன. சனிக் கிழமையன்று மாலை (இரவு) 8- ம ணி சுமாருக்கு நாமக் கல்லை அடைவேன். என் மைத்துனர் பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருப்பார். அப்பொழுது ரூ 2/- கொடுத்தால் குதிரை வண்டியில் 2 மணி நேரத்தில் பொட்டணம் அடையலாம். ரூ 5/- கொடுத்தால் மகிழ்வுந்தில் அரைமணி நேரத்தில் பொட்டணத்தை அடையலாம். என் மைத்து னருக்குத் தெரிந்த முதலாளி ரூ 2/-க்குப் பேருந்தையே பொட்டணத்திற்கு அனுப்புவார். இம்மாதிரியான சந்தர்ப் பங்களில் என் மைத்துனர், அவருடன் வந்திருக்கும் ஓரிரு நண்பர்கள் எல்லோருமாக ஒன்பது மணி சுமாருக்குப் பொட்டணத்தை வந்தடைவோம். இரண்டாண்டுகள் பத்துப் பதினைந்து தடவைகள் பொட்டணத்திற்கு என் இன்பப் பயணம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. குமிழி -55 55. இளங்கலைப் பட்டத்தேர்வும் முடிவும் தேர்வுகள் மாணாக்கர் கண்டு அஞ்சும் ஓர் அமைப்பு முறை. தொடர்ந்து இடைவிடாது படிப்பவர்கட்குத் தேர்வுகள் அச்சம் தருவ தில்லை. என்னைப் பொறுத்தவரை தேர்வுகள் எனக்கு இன்பத்தைத் தருவனவாக இருந்தன. பெரும்பாலும் அன்றைய தேர்வுகள், நினைவாற்றலைத் தேர்வன வாகவே அமைந்திருந்தன. நினைவுச் என்பது என்ன? இன்றைய உளவியலார் கற்றல் மூளையில் மாற்றங்களை உண்டாக்கு கின்றது என்று கூறுகின்றனர். இம்மாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு இருத்தப்பெறுகின்றன . அவை 15. நினைவு - Memory.