பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424 நினைவுக் குமிழிகள்-1 தனியாளின் நடத்தை மூலம் வெளிப்படுகின்றன. இந் நடத்தை தான் நினைவு என்பது. அதாவது, மனம் தன்னுடைய செயலால் கருத்துகளைப் பதிந்து, இருத்தி, திரும்பவும், தேவையான பொழுது வெளியிடுவதையே ' நினைவு' என்ற சொல்லால் குறிக்கின்றோம். இதனை ஈண்டு விளக்குவது பொருத்தமாகின்றது. 'கிச்சிலிப் பழம்' எப்படி இருந்தது என்பதை நினைவில் வைக்க வேண்டு மானால் அதன் மஞ்சள் போன்ற நிறம், உருண்டை வடிவம், தொளைகள் உள்ள தோல், ஊற்றுணர்ச்சி, மணம், சுவை ஆகியவை மனத்திற்கு வருகின்றன. இவ்வாறு 'கிச்சிலிப் பழம்' என்ற கருத்தினைப் பெறுகின்றோம். இதனை உண்மைக் கிச்சிலிப் பழத்துடன் வைத்து நாம் மயங்கு வதில்லை. அதற்குக் காரணம் நாம் பார்த்த பல கிச்சிலிப் பழங்களையும் திரும்பவும் நினைவுபடுத்திக் கொள்வதே யாகும்.16 கிச்சிலிப்பழக் கருத்தே படிமம் என்பது. நினைவில் பதிவு பெறுதல்! 8 இருத்துதல், 1 மீட்டு மொழி த ல், 20 மிட்டறிதல் 2 1 என்ற நான்கு கூறுகள் அடங்கி யிருப்பதாகக் கூறுவர் உளவியலார். இந்தக் கூறுகள் ஒவ்வொன்றும் முக்கியமான வை. மனத்தில் தெளிவாகப் பதிபவை அதிகக் காலம் நீடித்திருக்கும். தேர்வுக்குப் பல நாட்களுக்கு முன்னரே நன்கு விளக்கம் பெறும்வரையில் கற்று, சிறிது காலம் இடையிட்டுத் திரும்பவும் அதில் பயிற்சி பெற்றால் நலம் பயக்கும். நிரந்தரமாக நினைவிலிருத்த வேண்டியவற்றை அடிக்கடித் திரும்பக் கூறுதல் வேண்டும்; கற்கும் பகுதிகளின் இயல்புகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். 16. நினைவு படுத்திக் கொள்ளல - Recollect 17. படிமம் - Image; 18. பதிவு பெறுதல் - apprehen- sion; 19, இருத்துதல் - Retention; ' 20, மீட்டு மொழிதல் - Reproduct/on; 21. மீட்டறிதல்- Recognition.