பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கலைப் பட்டத்தேர்வும் முடிவும் 425 புனித சூசையப்பர் கல்லூரியில் பிப்பிரவரி முடிவிற்குள் நடத்த வேண்டிய பாடப் பகுதிகளை-- குறிப்பாக அறிவியல் பாடங்களில் நடத்தி முடித்து விடுவார்கள். மார்ச்சு மாதத்திலிருந்து பதினைந்து நாட்களில் இரண்டாண்டுகளில் நடத்தியவற்றைத் திரும்பவும் வேகமாக மீள்பார்வை செய் வார்கள். சனவரி முதலே நான் இப்பாடங்களைத் திருப்பிப் பார்த்துக் கொண்டிருப்பதால் மீள் பார்வையால் நான் பயன் அடைந்தேன். ஒருகுறி கேட்போன் இருகால் கேட்பின் பெருக நூலில் பிழையா டிலனே. 22 என்ற பவணந்தியாரின் கூற்று இதற்கு ஒத்து வருவதைக் காணலாம். முதன் முதலாக ஆசான் கற்பித்த நூற் பொருளை நிரம்பக் கற்றுக் கொண்டாலும், ஆசிரியரின் புலமைத் திறத்தில் காற்பங்குதான் பெற முடியும் என்கிறார் 8 இந்த இலக்கண ஆசிரியர். மாணாக்கர்கள் ஒருவரையொருவர் வினவும் வினாக் களுக்கு விடைகாணல் வேண்டும், ஒருவருக்கு விடை தெரிந்திருந்தால் அது மீள்நோக்காக? * அமைகின்றது; தெரியாதிருந்தால் அது கற்பதாகின்றது. இவ்வாறு கலந்து பயில் வ தால் இம்முறை பதிவித்தலில் பெரும்பங்கு பெறு கின்றது. நன்னூலாரும், அவ்வினை யாளரொடு பயில் வகை ஒருகால் செவ்விதின் உரைப்ப அவ்விரு காலும் மையறு புலமை மாண்புடைத் தாகும்* 6 22. நன்னூல் - 42 23. ஷெ - 44, 24. மீள நோக்கு - Review 25. நன்னூல் - 45