பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 நினைவுக் குமிழிகள்-1 என்று கூறியிருத்தல் ஈண்டு நினைத்தல் தகும். அறிவியல் பாடங்களில் இவ் வாறு கலந்து பயில்வ தற்கு வாய்ப்பில்லை . ஆனால் கணிதப் பாடத்தில் பக்கத்து அறையிலிருந்த சுப்பண்ணன்மூலம் இத்தகைய வாய்ப்பினைப் பெற்றேன், சனவரியிலிருந்தே பாடங்களைத் திருப்பும் பணியில் ஈடு பட்டேன். மாலை நேரத்தில் காவிரிக்கரையே இவ்வாறு செய்வதற்குத் தக்க இடமாக அமைந்தது. பொது வேதியியல், கணிதம் அநங்கக வே தியியல், அங்கக வேதியியல், கணிதம், அங்கக வேதியியல், பொது வேதியியல், அகங்கவேதியியல் என்று பாடங்களை மாற்றித் திருப்பியதால் பாடங்களை இடையிட்டுத் திருப்பும் பயிற்சி பெற வாய்ப்பாக அமைந்தது. இது மனத்தில் நிரந்தரமாக நினைவில் அமைவதற்குத் துணை செய்தது. தேர்வுக் காலங்களிலாயினும், சாதாரண மாகக் கல்லூரி நாட்களாயினும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து படிக்கும் பழக்கம் உண்டு. இதனால் காலை மணிக்கே பசி ஏழு கிளம்பிவிடும். இதைத் தவிர்ப்பதற்காக அதிகாலை 6-6 மணிக்கு இரண்டு இட்லி 3 கப் காப்பி எடுத்துக் கொள்வேன். காலை 9 மணி வரை படிக்க வசதியாக இருக்கும். 9 மணிக்கு உணவு உண்டு கல்லூரிக்குப் போகநேரம் சரியாக இருக்கும். தேர்வுக்காக தரப்பெறும் 15 நாள் விடுமுறையில் வசதி போல் முன் பின்னாக இம்முறை மேற்கொள்ளப்பெறும். ஏப்பிரல் மாதம் தேர்வுகள் தொடங்கின தாக நினைவு. முதல் நாளன்று பொது வேதியியல் தேர்வு இருந்தது; தேர்வு முற்பகல் தொடங்கியது. மிக நன்றாக எழுத முடிந்தது; மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆயத்தம் செய்து வைத் திருந்த கட்டுரைகளில் இரண்டு இதில் பயன்பட்டன . தேர்வு முடிவுகள் வெளிவந்தபின் ரூ. 2/- கட்டணம் செலுத்தி மதிப் பெண் வாங்கிப் பார்த்ததில் 85 விழுக்காடு பெற்றிருந்தது தெரிந்தது. அடுத்த நாள் அங்கக வேதியியல் தாள் எழு