பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கலைப் பட்டத்தேர்வும் முடிவும் 427 வேண்டியிருந்தது. இதிலும் ஆயத்தம் செய்து வைத்திருந்த வற்றில் இரண்டு கட்டுரைகள் பயன்பட்டன. இத் தாளில் ஐந்து வினாக்கட்கு 43 வினாக்களுக்குத் தான் விடையளிக்க நேரம் இருந்தது. எம்.எஸ்சி தரத்தில் சில விடைகள் அமைந்தன. இதில் 87 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றது தெரிய வந்தது. மூன்றாம் நாள் அநங்கக வேதியியல் தாள் எழுதவேண்டி வந்தது. இத் தாளை எவரும் எப்பொழுதும் திருப் தியாக எழுத முடிவதில்லை . இதில் 62 விழுக்காடுதான் மதிப்பெண்கள் பெறமுடிந்தது. அடுத்து எழுதிய கணிதத் (கால்குலஸ் பிரிவு) தாள் வினாக் கட்கு மிக நன்றாக விடையிறுத்தேன், தாள் முழுவதுக்கும் 24 மணி நேரத்தில் விடை.யிறுத்தேன். இதில் 1{10 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருந்தேன். இன்னொரு தாளுக்குரிய பாடங்களைக் கற்பித்த இராமச்சந்திர அய்யர் முதலாண்டுத் தொடக்கத்திலேயே திருநாடு அலங்கரித்தார். இப்பாடங் களை விட்டு விட்டு மூவர் கற்பித்தனர். எல்லா மாணாக்கர் கட்கும் இத் தாளில் சரியான அடி; பெரும்பாலோர் தேர்வில் வெற்றியடைய வேண்டிய குறைந்த மதிப்பெண் கள் கூடப் பெற வில்லை , எனக்கு 52 விழுக்காடு வந்திருந்தது, சரியான ஆசிரியர்கள் அமையாததால் வகுப்பிலுள்ள அனைவரும் நல்லூழ் இல்லாதவர்களானோம். கணிதம் ஆசிரியரின்றிப் படித்துக் கொள்ளும் பாடமும் அன்று, அடுத்து எழுதிய இயற்பியல் இரண்டு தாள்களிலும் 81, 79 விழுக்காடுகள் பெற்றிருந்தேன். அக்காலத்தில் எழுத்து முறைத் தேர் வு க க ள் த் தொடர்ந்து செய்முறைத் தேர்வுகள் நடைபெறுவ தில்லை. இருபது நாட்கள் இடைவெளிவிட்டு நடைபெற வேண்டி யிருந்தமையால் அறையைப் பூட்டிக் கொண்டு மாமனார் வீடு வந்தடைந்தேன். செய்முறைத் தேர்வுக்குரிய நான்கு