பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 நினைவுக் குமிழிகள்-1 பதிவேடுகளையும் ஒரு சில இன்றியமையாத நூல்களையும் எடுத்துக் கொண்டு வந்திருந்தேன். பதினைந்து நாட்கள் இவற்றைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். தேர்வு கள் தொடங்கும் இரண்டு நாட்களுக்கு முன்னரே திருச்சி திரும்பினேன். விதிப்படி ப தி ேவ டு க ள் மூன்றையும் பேராசிரியர்களின் மதிப்பீட்டிற்காகக் அந்தந்தத் துறைகளில் தந்து விட வேண்டும். தேர்வுகள் தொடங்கின, ஆறுமணி நேரம் (முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4 மணி முடிய) நடைபெற வேண்டிய தேர்வு முதலில் தொடங்கியது. இதை மிக நன்றாகச் செய்தேன். இடை இடையே பேராசிரியர் A. C சூசையப்பர் என்னிடம் வந்து நின்று நான் செய்வதைப் பார்த்துச் சென்று சொண்டிருந்தார். நான் செய்து வருவது அவருக்கு மன நிறைவு தந்தது என்பதை அவர் முகத்தி னின்றும் அறிந்து கொள்ள முடிந்தது. இறுதியாக வந்த போது பூரட்டில் குறித்த அளவு என்ன என்று கேட்டார். நான் 26, 2 என்று சொன்னேன்; அவர் அதை 26.1 என்று போட்டுக் கணக்கீடு செய்யும்படியும் சொல்லிச் சென்று விட்டார், வேறுசில மாணவர்கள் 'சார், சார்' என்று அவரைக் செஞ்சும் பாவனையில் முகங்களைக் காட்டி நின்ற னர். அவர் 'Proceed Mister, Proceed Mister' என்று கூறிக்கொண்டே சென்று விட்டார். இவர்கள் யாவரும் தாவரஇயலைத் (Botany) துணைப்பாடமாகத் தேர்ந்து எடுத்துக் கொண்டு படித்தவர்கள். வேதியியலில் ஆறு மணி நடைமுறைத் தேர்வில் பண்பு முறைப் பகுப்பாய்வுத் தேர்வும் (Qualitative Analysis) அடங்கும். இதில் இரண்டு உப்புகளின் கலவையைத் தந்து அவற்றை எவை எனக் கண்டறிதல் வேண்டும். ஒவ்வொரு உப்பிலும் அமிலப்பகுதி (Acid radical), மூலப்பகுதி (Basic radica1) என்று உண்டல்லவா? கொடுக்கப்பட்ட இரண்டு அமிலப் பகுதிகளையும் இரண்டு மூலப்பகுதிகளையும் காணல்