பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கலைப் பட்டத்தேர்வும் முடிவும் 429 வேண்டும். இரண்டு அல்லது மூன்று கிராம் அளவு தான் உப்புக் கலவை கொடுக்கப் பெற்றிருக்கும். சிறிதும் வீணாக்காமல் கருத்துடன் கையாள வேண்டும். முதற்குழு உலோகங்கள் (First group metals) தொடங்கி வரிசையாக ஐந்தாம்குழு (Fifth group metals) வரை படிப்படியாகப் பார்த்துக் கொண்டே வருதல் வேண்டும். இப்படிச் செய்து தான் இரண்டு மூலப்பகுதிகளையும் (Basic radicals) கண்டறிதல் வேண்டும், இவற்றைக் கண்டறிவதில் தான் விழிப்பாக இருத்தல் வேண்டும். அமிலப் பகுதிகள். எளிதாகத் தட்டுப்பட்டுவிடும்; சில முக்கிய சோதனைகளால் உ.றுதிப்படுத்திவிட லாம், ஆனால் மூலப்பகுதிகளைக் கண் டறியும்போது செய்யப்படும் பல சோதனைகளால் திரவம் தீவிரம் குறைந்து விடுவதால் உறுதிப்படுத்துவது மிகச் சிரம மாக இருக்கும். இரண்டு, மூன்று, நான்காவது குழுவிலே இந்த இரண்டு ப கு தி க ளு ம் உறுதிப்பட்டுவிட்டால் அதிர்ஷ்டமே; ஐந்தாவது குழுவும் வரும்படி நேர்ந்தால் மிக விழிப்பாகச் சோதனைகள் செய்தல் வேண்டும். இந்தத் தேர்வில் நான் நான்கு பகுதிகளையும் சரியாகக் கண்டறிந்த தால் 100 விழுக்காடு மதிப்பெண்கள் பெறும் பேறு பெற்றேன் . பேராசிரியர் A. C, சூசையப்பர் தாவர இயலைத் துணைப்பாடமாக எடுத்துப் படித்த மாணவர்களிடம் தனிச் சலுகைகள் காட்டுவார்; கணிதத்தைத் துணைப்பாடமாகக் கொண்டு படித்தவர்களிடம் அரைகுறை ஆர்வமுடையவ ராகவே (Lukewarm) இருப்பார். இவர்களில் சிலர் இரண் டாண்டுகள் இவரை 'வளைய வளைய' வந்து கொண்டிருப் பார்கள், ஏதோ அக்கறையாகப் படிப்பவர்கள் போல் "பாவனை' பண்ணுவார்கள், இவர்கள் மறைத்திரு ஹாஸ் சாமியாரிடமும் (துறைத் தலைவர்) இப்படித்தான் நடந்து கொள்வார்கள். ஆனால் இருவரும் இம்முறைகளால் மயங்கு பவர்கள் அல்லர். அவர்களிடம்தான் வகுப்புத்தேர்வு மதிப்