பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 நினைவுக் குமிழிகள்-1 பெண் பட்டியல், பதிவேடுகளை ஒழுங்காக எழுதிக் குறித்த காலத்தில் தந்த விவரங்கள் முதலியவை சாதகக் குறிப்புகள் போல் இருக்கின்றனவே , இ வ ற் ன ற ப் பார்க்காமல் சான்றிதழ் கூட வழங்க மாட்டார்கள் . செய்முறைத் தேர்வுகள் ந டை ெப று வ த ற் கு மு ன் மாணவர்கள் எழுத்து முறைத் தேர்வுகளில் பெற்ற மதிப் பெண்கள் பேராசிரியர்கட்குத் தெரிந்துவிடும். இவற்றில் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்றவர்களிடம் மட்டிலும் செய் முறைத் தேர்வுகள் நடைபெறும்போது இவர்களின் 'கடைக் கண் பார்வை ' இருக்கும் A C. சூசையப்பர் என் அருகில் வந்து போய் கொண்டிருந்தது ஒரு சிலருக்குப் பொறாமையாகக் கூட இருந்திருத்தல் கூடும். இரண்டாண்டுகளாகப் பேரா சிரியர் களிடம் 'காக்கை' பிடிப்பதற்குக் காக்கைகள் போல் சுற்றிக் கொண்டிருந்தவர்களிடம் பேராசிரியர் அருகில் கூட வர வில்லையே என் பது அவர்கட்கு வியப்பாகக்கூட இருந் திருத்தல் கூடும். இவர்கள் தம் உழைப்பு, தம் அறிவுத்திறன், உண்மையாகத் தாம் பாடங்களில் ஈடுபட்டது, இதுகாறும் நடந்த வகுப்புத் தேர்வுகள், காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் இவற்றில் தாம் பெற்ற மதிப்பெண்கள் இவற்றைச் சிந்தித்து 'ஆன்மப் பரிசோ தனை' நடத்துவார்களானால் உண்மை தட்டுப்படாமற் போகாது. அடுத்த நாள் நடைபெற்ற ‘அங்கக வேதியியல் பற்றிய செய்முறைத் தேர்வில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான தேர்வுமுறை அமைந்திருந்தது. எல்லோரும் என்ன செய்ய வேண்டும் (40 பேர்) என்று செய்யவேண்டிய முறையை 'சொல்லுவதெழுதுதல்' (Dictation) மூலம் தெரிவித்து விட்டனர். இனி செய்முறைத் தேர்வை சூழ்ச்சித் திறனுடன் கையாள்வதைப் பொறுத்துதான் சோதனையின் முடிவுகள் அமையும். பொதுவாக ஆய்வுக் கூடங்களில் நான் செய்திறன்