பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கலைப் பட்டத்தேர்வும் முடிவும் 431 நேர்த்திக்குப் பெயர் போனவ னாக இருந்ததைப் பேராசிரியர் களும் சோதனைக்கூட அலுவலர் அ ளும் நன்கு அறிவர், இரண்டு வேதியியல் சோதனை களிலும் என் சோதனை முடிவுகளில் தவறுகள் (Experimental error) ஒரு விழுக் காட்டிற்குக் குறைவாக இருந்தமையால் 100 விழுக்காடு மதிப்பெண்கள் பெறமுடிந்தது, தவறுகள் ஒரு விழுக் காட்டிற்குக் குறைவாக இருந்தால் 100 விழுக்காடும் ஒரு விழுக்காட்டிற்குமேல், ஆனால் இரண்டு விழுக்காட்குற்குக் கீழே, தவறுகள் இருப்பின் 60 விழுக்காடும் மதிப்பெண்கள் பெறுவார்கள். இறுதியாக, இயற்பியல் செய்முறைச் சோதனை செய்யும் நாள் வந்தது. மாணவர்களின் எண்ணிக்கைக் கேற்ப பரிசோதனைகள் ஏற்பாடு செய்யப் பெற்றிருக்கும்; பரிசோதனைகளுக்குக்கு வரிசை எண்கள் இடம் பெற்றி ருக்கும், சோ $2, னைக் கூடத்தின் நுழைவாயிலில் சிறுசிறு அட்டைத் துண்டுகளில் எண்கள் எழுதப் பெற்றிருக்கும். ஒவ்வொருவரும் ஏதாவது ஓர் அட்டையை எடுத்துக் கொண்டு அதிலுள்ள எண் குறிக்கும் சோதனை எண்ணுக் குரிய சோதனையைச் செய்ய வேண்டும். நான் 3 என்ற எண்ணை எடுத்ததாக நினைவு. அது பட்டகம் (Spectrometet) பற்றிய சோதனை. நீர் பட்டகத்தினைத் (VWaterprism] துணைகொண்டு நீரின் விலக்கஎண் (Refractive index) கண்டறிதல் வேண்டும். எளிதான சோதனை தான். எனினும் துணைக்கருவியை நன்றாகக் கையாளும் பயிற்சியைப் பெற்றவர் கட்கு எளிதானது. சோதனையை முடித்துப் போகும்போது அதனை (வழி) மாற்றக் கோணத்தில் (Angle of deviation) வருமாறு சரிப்படுத்தி வைத்துச் செல்ல வேண்டும். மூன்று மணி நேரம் செய்யவேண்டிய சோத னையை ஒன்றரை மணி நேரத்தில் செய்து முடித்து விட்டேன்.