பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432 நினைவுக் குமிழிகள்-1 செய்முறைச் சோதனை: ளில் இத்தகைய பயிற்சி பெற்றிருந்தாலும் நீர்பட்டகம் (water-prism) பற்றிய சோத னையைச் செய்ததில்லை, இதனால் அதற்குரிய வாய்பாடு (Formula) தெரியவில்லை . தெரிந்தால்தான் நீரின் விலகு விகிதம் (Refractive index) கணக்கிட முடியும். கண்ணாடி யின் விலகு விகிதம் தெரிந்ததே: கிளார்க் அட்டவணை யிலிருந்து இதனைத் தெரிந்து கொள்ளலாம். இதனை வாய்பாட்டில் அமைத்துக் கணக்கிட்டால் நீரின் விலகு விகிதம் ெத ரி ந் து வி டு ம். இந்த வாய்பாட்டை வகுப்பில் சொல்லித் தரவில்லை; செய்முறை சோதனைகள் கற்கும்போதும் இதனை அறிந்து கொள்ளும் வாய்ப்பு பெற வில்லை. தேர்வு மேற்பார்வையாளர் ஒரு மலையாளி. வாய்பாடு தெரியாமல் கணக்கிட முடியாதென்றும் இரண்டாண்டுக் காலத்தில் இதனைப் பேராசிரியர்கள் சொல்லித்தரவில்லை என்பதையும் அவர் நன்கறிவார்' வாய்பாடு தெரியாமல் கணக்கீடு செய்ய முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்த என்னிடம் வந்தபோது வாய்பாட்டைத் தெரிவித்தார். பத்து மணித்துளியில் கணக் கீட்டை முடித்துவிட்டேன். என் விடையைக் கண்டு புன் முறுவலுடன் தலையசைத்தார். மறுநாள் 100 விழுக்காடு பெற்றதையும் தெரிவித்தார். இப்படி என் கல்லூரிப்படிப்பில் கலைமகளின் 'கடைக்கண் நோக்கு' இருந்தமையால் என் கடின உழைப்பினால் சிறந்த முறையில் தேர்வுகளில் வெற்றி யடைய முடிந்தது. அடுத்த நாள் அறையைக் காலி செய்து கொண்டு பொட்டணம் (மாமனார் வீடு) வந்து சேர்ந்தேன்.