பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி -55 56. இளங்கலைத் தேர்வு வெற்றிக்குப்பின் இளங்கலைத் தேர்வு வெற்றி அறிவிக்கப் பெற்றபின் திருச்சி சென்றேன். கல்லூரியில் முதல்வர் பேராசிரியர் ஜெரோம் டி சௌஸா சாமியாரைச் சந்தித்து அவர் ஆசியைப் பெற்றேன். நல்ல மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பிலும் கல்லூரியில் முதல்வனாகவும் தேர்ச்சியடைந்தமையைத் தெரிவித்து மகிழ்ந்தார். அடுத்து, பேராசிரியர் சீநிவாசன் (கணிதம்), பேராசிரியர் என். அநந்தகிருஷ்ணன் (இயற்பியல்), பேராசிரியர் மறைத்திரு ஹாஸ் அவர்கள் (வேதியியல் துறைத்தலைவர்), ேப ர ா சி ரி ய ர் ஏ. சி. சூசையப்பர் (வேதியியல்), ேப ர ா சி ரி ய ர் சி.கே. இராமகிருஷ்ண ன் (வேதியியல்) இவர்களை எல்லாம் சந்தித்து ஆசி பெற்றேன். பேராசிரியர் ஹா ஸ் சாமியார் அரியதோர் சான்றிதழை வழங்கி ஆசி கூறினார், ஆரோக்கியசாமி என்ற சோதனைக் கூடப் பொறுப்பாளர், சோதனைக்கூடச் சிறுவர்கள் இவர் களையும் சந்தித்தேன். இவர்கள் தந்த உதவி மறக்க முடியாதது. முதல்வரைச் சந்தித்து 1, நடத்தை பற்றிய சான்றிதழ் 2. வயது பற்றிய சான்றிதழ் 3. இட மாற்றச் சான்றிதழ் தருமாறு வேண்டி விண்ணப்பம் தந்தேன் . மூன்று நாள் கழித்து வருமாறு பணித்தார் அவர். புனித சூசையப்பர் கல்லூரியில் ஒவ் ெவ ா ரு மாணாக்கரைப்பற்றியும் அவர் சேர்ந்த நாள்தொட்டு பேரேடு ஒன்று திறக்கப்பெற்று அதில் அம்மாண வரைப் பற்றிய எல்லா விவரங்களும் பதியப்பெறும்; காலாண்டு, அரையாண்டு. முழு ஆண்டுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் கள், கல்லூரிக்கு வந்த நாட்கள், விதிகளுக்குப் புறம்பாக நடந்து ஏதாவது தண்டம் (Fines) செலுத்தியிருந்தால் -28-