பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 நினைவுக் குமிழிகள்-1 அவற்றின் விவரம், பேராசிரியர்கள் மாணாக்கர்களைப் பற்றி பாதகமான குறிப்புகள் தந்திருந்தால் அவற்றின் விவரம் ஆகிய அனைத்தும் அதில் பதிவாகி இருக்கும்! மாணாக்கரின் நடத்தைத் தகுதி சான்றிதழ் வழங்கும் போது முதல்வர் இந்தப் பேரேட்டை நன்கு ஆராய்ந்து தான் சான்றிதழ் வழங்குவார். இந்தச் சான்றிதழ் முதல்வர் கையெழுத்திலேயே இருக்கும்; தட்டச்சு வசதியை இதில் பயன்படுத்துவதில்லை. பேராசிரியர் ஹாஸ் சாமியார். முதல் வர் பேராசிரியர் ஜெரோம் டி. செளலா சாமியார் இவர்கள் நல்கிய சான்றிதழ்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. அவர்கள் தந்த சான்றிதழ் களில் கண்ட குறிப் புக ளை இன்றும் மறை வாக்குகளாக நினைந்து போற்றி வருகின்றேன்; அவற்றில் கண்ட உண்மைகட்கு இலக்கியமாகவும் நடந்து வருகின்றேன். அக்காலத்தில் திருச்சி மாநகரில் சர் டி. தேசிகாச்சாரி என்ற வைணவ வழக்குரைஞர் ஒருவர் இருந்தார்; மிகு புகழ் பெற்றவர். பல்வேறு குழுக்களில் உறுப்பினராகவும் தலை வராகவும் இருந்து பணியாற்றுபவர். இருப்பூர்தித் துறையில் அவருக்கு மிகுந்த செல்வாக்கு உண்டு என்பது நாடறிந்த செய்தி. சில மாணாக்கர்கள் அவரை அண்மி நடத்தை சான்றிதழ்களைப் பெறுவதுண்டு. இதையறிந்த நான் அவரிடம் சான்றிதழ் பெறவேண்டும் என விழைந்தேன். முதல்வர் மூன்று நாட்கள் கழித்து வருமாறு சொல்லி யிருந்தாரல்லவா? இந்த மூன்று நாட்களை இவ்வாறு கழித்தேன், ஒருநாள் முற்பகல் ஒன்பது மணிக்குக் கண்டோன் மேண்டிலுள்ள அவர் இல்லம் சென்று செவ்வியறிந்து அவரைச் சான்றிதழ் வழங்குமாறு வேண்டினேன். அவர் '1, உன்னை யார் என்று அறியேன்; உனக்கு எப்படிச் சான்றிதழ் வழங்க முடியும்? 2. இந்த ஊரில் எத்தனையோ பேர்கள் இருக்க, என்னை நாடி வந்த காரணம் என்ன?'