பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கலைத் தேர்வு வெற்றிக்குப்பின் 435 என்று வினாக்களை விடுத்தார். மேலும், “நீ துணிவான பையனாகவும் சுறுசுறுப்பானவனாகவும் காணப்படுகின்றாய். உனக்கு வழங்க நினைக்கின்றேன். உன்னை தெரியாதே என்று தான் கவலைப்படுகின்றேன்” என்றார். நான் சொன்னேன்: “ஐயா, 1. முதல்வர் சான்றிதழ் பெற மூன்று நாட்கள் கழித்து வருமாறு சொல்லியுள்ளார். அவர் தந்தவுடன் அதனைத் தங்களிடம் காட்டி என்னைப் பற்றி அறிமுகம் செய்து கொள்வேன். 2. உங்கட்கு இருப்பூர் தித் துறையில் நல்ல செல்வாக்கு உள்ளதாகப் பொதுமக்கள் பேச்சு, உங்கள் சான்றிதழைக் கொண்டு இருப்பூர்தித் துறைக்கு விண்ணப்பித்தால் வேலை கிடைப்பது உறுதி என்றும் பேசிக் கொள்ளு கின்றனர். அதனால் தால் உங்களை நாடிவந்தேன் என்று. அவர் “நீ நன்றாகப் பேசுகின்றாய். இங்கிதம் அறிந்து வந்து சந்தித்தாய், யாரும் உனககுத் துணையில்லாததால் நீயே துணிவாக வந்து என்னைச் சந்தித்துக் கேட்கின்றாய். என்னிடம் சான்றிதழ்கட்கு வருபவர்கள் எல்லாம் யாரோ ஒரு பெரிய மனிதரைக் கூட்டிக்கொண்டு வருவார்கள். சரி, முதல்வர் சான்றிதழை எடுத்துக் கொண்டு என்னிடம் வா; தருகின்றேன்” என்று இசைவு காட்டினார். இதற்கிடையில் இருப்பூர்தித் துறையில் நந்திரெட்டியார் என்ற ஒருவர் பெரும்பதவியிலிருந்தார் என்பதைக் கேள்வி யுற்றிருந்தேன். அவர் மிகவும் செல்வாக்கும் புகழும் பெற்றிருந்தார். அவர் மலைக் கோட்டையில் யானைக்கட்டி யிருக்கும் தெருவில் இருப்பதாக அறிந்து அவரைச் சந்தித்தேன். என்னைப்பற்றிய சான்றிதழ் ஒன்று வழக்கு மாறு வேண்டினேன். அவர் சொன்னார்: “என்னுடைய சான்றிதழ் வேண்டா. நான் எப்போதும் உங்கட்கு உதவுவ