பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 நினைவுக் குமிழிகள்-1 தற்குத் தயாராக உள்ளேன். நீங்கள் காட்டுப்புத்தூர் பெருநிலக்கிழார் திரு. கே. சி. சப்தரிஷி ரெட்டியார் அவர் களிடம் சான்றிதழ் பெறுங்கள், அவர் சட்டமன்ற மேலவை உறுப்பினர்; செல்வாக்குள்ளவர். அவருக்கு நான் உங்களை அறிமுகப்படுத்தி ஒரு கடிதம் தருகிறேன். போய்வாருங்கள் என்று . அடுத்த நாள் காலையில் சிற்றுண்டிக்குப்பின் குழித்தலை வழியாகக் கரூருக்குச் செல்லும் இரும்பூர்தியில் ஏறி அவர் சொன்ன நிலையத்தில் இறங்கிக் காவிரியைக் கடந்து காட்டுப் புத்தூர் சென்று மிட்டாதாரின் அரண்மனையை அடைந்தேன், நந்தி ரெட்டியாரின் கடிதத்தை ஆள் மூலம் கொடுத்தனுப்பினேன். மிட்டாதார் உடனே தன்னைப் பார்க்குமாறு பணித்தார். சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம். பிறகு ஓய்வு அறையைக் காட்டி அதில் சிறிது நேரம் இருக்குமாறு பணித்தார். பகல் 12.30 மணி இருக்கும், உணவுக்கு வருமாறு ஆள் அனுப்பினார். பெரிய தலைவாழை இலையில் பல்வேறு உணவு வகைகள் பரிமாறப் பெற்றிருந்தன. தான் நடந்து கொண்டே அதை வை, இதை வை என்று பரிமாறுபவனுக்கு ஆணை பிறப்பித்துக் கொண்டிருந்தார். அத்தகைய எளிய, ஆனால் சுவையான உணவை, அன்றிலிருந்து இன்றுவரை உண்டதில்லை. என் வாழ்வில் பெரிய பெரிய விருந்துகளில் கலந்து கொண்ட துண்டு. செட்டிநாட்டில் இருந்தபொழுது மிகச்சிறந்த விருந்துகளில் பங்கு பெற்றதுண்டு. ஆனால் அவை யெல்லாம் மிட்டாதார் விருந்துக்கு அடுத்தபடிதான், அந்த நல்ல விருந்தை இன்றும் (15-10-1988) நினைந்து பார்க்க முடிகின்றது. விருந்து முடிந்ததும் தன் அறைக்கு என்னை இட்டுச் சென்றார். அங்குத் தாம்பூலம் தயாராக இருந்தது . பழவகை