பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இள ங்கலைத் தேர்வு வெற்றிக்குப்பின் 437 களும் இருந்தன. ஒரு சில திராட்சைப் பழங்களையும், கிச்சிலிப் பழத்தையும் எடுத்து உண்டேன். திருமணமானவன் னாதலால் துணிவாகத் தாம்பூலம் தரித்துக் கொண்டேன். சான்றிதழ் ஓர் உரையில் போட்டுத் தயாராக வைத்திருந் தார்; அதை என்னிடம் தந்து வாழ்த்தினார். 'பெரியாரைத் துணைகொள்' என்ற பாட்டியின் வாக்கு நினைவிற்கு வந்தது. அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறன் அறிந்து தேர்ந்து கொளல்." என்ற வள்ளுவர் வாக்கையும் நினைவுகூர முடிகின்றது. நந்திரெட்டியாரின் கடிதம் செய்த பெருமையை இன்றும் நினைந்து அசைபோட முடிகின்றது. மிட்டாதாரிடம் விடை பெற்று க் கொண்டு மீண்டும் காவிரியைக் கடந்து (கோடை காலமாதலால் வெள்ளம் இல்லை) இரும்பூர்தியிலேறித் திருச்சி வந்து சேர்ந்தேன். இப்போது மாலை 6 மணியாக இருந்தது. சரியாக 7-மணி அளவில் நந்திரெட்டியாரைச் சந்தித்து, சான்றிதழ் பெற்ற விவரங்களையும் மிட்டா தார் உபசரித்த முறையையும் கூறி அவருக்கு நன்றி தெரிவித்தேன். அக்காலத்தில் எந்த வேலைக்கு விண்ணப்பித்தாலும் கல்லூரி முதல்வரின் சான்றிதழைத் தவிர, வேறு இரண்டு சான்றிதழ்களை வற்புறுத்தி வந்தனர். அடுத்து, உயர் நிலைப் பள்ளிப் படிப்பின்போதே முசிறியில் கே. இராமச்சந்திர அய்யர் என்னை அறிமுகம் செய்து வைத்த தி.மு. நாராயண சாமிபிள்ளை அவர்களைச் சந்தித்தேன். இப்போது அவர் மாவட்ட கழகத்தலைவராக இல்லை. வழக்குரைஞர் பதவி யில் இருந்தார். இவரது அலுவலகம் திருச்சி பெரிய கடை வீதியில் இருந்தது. செங்கமலம் பிள்ளை , எம். முத்துசாமி 26. குறள் - 441.