பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438 நினைவுக் குமிழிகள்-1 பிள்ளை , இன்னும் சிலர் இவரது அலுவலகத்தில் இளைய வழக்குரைஞர்களாக இருந்து வந்தனர். (இம்மூவரும் இப்போது திருநாடு அலங்கரித்து விட்டனர்). நாராயணசாமி பிள் ளையை அண்மி, முசிறியில் கே. இராமச்சந்திர அய்யர் அறிமுகம் செய்ததை நினைவூட்டி, இளங்கலைத் தேர்வில் முதல் தகுப்பில் தேர்ச்சியடைந்ததைச் சொல்லிச் சான்றிதழ் பெற்றுக் கொண்டேன். சௌலப்பியமே வடிவு கொண்டாற் போன்ற இவரிடம் சான்றிதழ் பெறுவது எளிதாக இருந்தது . மூன்று நாள் தவணைக்குப் பிறகு கல்லூரி முதல்வரைச் சந்தித்து அவரது ஆசியுடன் சான்றிதழ்களைப் பெற்றேன். இந்த சான்றிதழ்களைக் காட்டி, சர். டி, தேசிகாச்சாரியிடம் நடத்தை பற்றிய சான்றிதழ் பெற்றேன் . சுறுசுறுப்பான என்னை நோக்கி, “ நீ வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவாயாக" என்று வாழ்த்தினார், எழுபது அகவையை எட்டிய நிலையில் இருந்த அப்பெருமகனாரின் வாழ்த்து இன்றும் என் மனத்தில் பசுமையாகவே உள்ளது. இப்போது வேலைதேடும் படலத்திற்குத் தயாராக இருந்தேன். கோட்டாத் தூர் சென்று என் அன்னையின் ஆசிபெற்று மீண்டும் பொட்டணம் சென்று அங்கு நிரந்தரமாகத் தங்கலானேன். இங்கிருந்து கொண்டுதான் பல்வேறு வேலை கட்கு விண்ணப்பித்த வண்ணமிருந்தேன். குமிழி 57 57. விநோதச் செயல்கள் பாட்டணத்தில் நாகம்மாள் யார் மீதும் நம்பிக்கை வைக்கவில்லை, தம் பேத்தியைத் தவிர. தண்டவா ளப் பெட்டிச் சாவி தன் பேத்தியின் (என் மனைவியின்) கையில் தான் இருக்கும். பணம் தேவைப்படும்போது என் மைத்துனர்