பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விநோதச் செயல்கள் 439 பாட்டியின் இசைவு பெற்றுத் தங்கையிடம் சாவியை வாங்கிப் பணத்தை எடுக்கும் வழக்கம் நடைமுறையில் இருந்து வந்தது. பண் ைணச் செலவுக்குத் தேவைப்படும்போதும், பிறருக்குக் கடன் கொடுக்கத் தேவைப்படும்போதும் இவ் வழக்கம் நடைமுறையில் இருந்து வந்தது. தன் சொந்தச் செலவுக்குத் தேவைப்படும் பொழுது பாட்டியின் இசைவு பெறாமலேயே தன் தங்கையிடம்சாவியைப் பெற்றுப்பணத்தை எடுத்துக் கொள்வார். என்மைத்துனர் நடைமுறையில் பஞ்சதந்திரக்காரர்; பாட்டியை ஏமாற்றுவதில் எத்தனையோ தந்திர ங்களைக் கையாளுவார். ஒரு பழைய மோட்டார் சைக்கிள் வாங்கினார். அஃது ஓடும் நாட்களை விட ரிப்பேராகக் கிடக்கும் நாட்கள் தாம் அதிகம். வண்டியைப் பிரித்துப் போட்டு இவரே பூட்டுவார்; பழுதடைந்த பகுதி களை மாற்றுவார். இவர்தம் மூளை இயந்திரத் தன்மை வாய்ந்தது. தாமாகவே இயந்திர நுட்பங்களையெல்லாம் அறிந்து கொள்வார். பாட்டிக்குப்பேரன் பணத்தை வீணடிக்கின்றான் என்ற ஐயம் ஏற்பட்டது. மோட்டார் சைக்கிள் வீட்டிற்கு வந்ததி லிருந்து இந்த ஐயம் தோன்றத் தொடங்கியது. ஒரு சமயம் இதைக் கேட்கவே தொடங்கி விட்டார். என் மைத்துனர் இந்நிலையைச் சமாளித்தது மிகவும் அற்புதம். இரண்டாம் உலகப் பெரும்போர் நடந்து கொண்டிருந்த சமயம், போர் நிதி திரட்டிக் கொண்டிருந்தது வெள்ளையரசு. இதில் பரிசுத் திட்டமும் புகுத்தப் பெற்றிருந்தது. ஐம்பது ரூபாய்ச்சிட்டு, நூறு ரூபாய்ச் சீட்டு என்றெல்லாம் விற்றுக் கொண்டிருந்தது, பாட்டியிடம் பேரன் சொன்னது : “பாட்டி, சர்க்காருக்கு யுத்த நிதிக்கு ரூ 50/- கட்டினேன்; மோட்டார் சைக்கிள் பரிசாக விழுந்தது. இன்னொரு நூறு ரூபாய் சீட்டுக்குக் கட்டியுள்ளேன். கார் விழப்போகிறது என்று சோதிடர் சொன்னார். நீ யாருக்கும் சொல்லாதே, கண் திருஷ்டி