பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 நினைவுக் குமிழிகள்-1 பட்டு விடும்” என்று. பாட்டியின் வாய் சும்மா இருக்குமா? வெறும் வாயை மெல்லுகிறவர்கட்கு அவல் போட்டமாதி ரி தன் வயதிலுள்ள சில கிழவிகளிடம் 'அலமேலு, என் பேரனுக்குச் சீட்டு போட்டதால் மோட்டார் சைக்கிள் விழுந்திருக்கிறது. கார் விழப் போகிறதாம். நீ யாருக்கும் சொல்லாதே' என்று சொல்லி வைக்க அது வதந்தி பரவுவது போல் ஊர் முழுவதும் பரவி விட்டது. இந்த 'நகைச்சுவை விருந்தை' திரு. நல்லப்ப ரெட்டியார் அடிக்கடிச் சொல்லிச் சொல்லி மகிழ்வார். பொட்டணத்தில் ரெட்டியார் வீடுகள் பதினைந்து இருந்தன. இப்போது ஐந்தாறு வீடு களாகி விட்டன என்பது கேள்வி. சோம்பேறிக் கூட்டம் எப்படிச் செழிக்க முடியும்? இவர்கட்கு அடுத்துக் குறைவாக உள்ளவர்கள் வேண்டுவக் கவுண்டன் மார்கள்; நிற்க நேரமில்லாமல் உழைப்பவர்கள், இவர்களைத் தவிர உடையார்கள், வேளாளக் கவுண்டர்கள், அரிசனர் இவர்களே அதிகமாக இருந்தனர். இவர்களுள் கவுண்டர்கள் மிக்க உழைப்பாளிகள். 'மேழிச் செல்வம் கோழைபடாது' என்பதை மறைமொழி யாகப் போற்றி உழைப்பவர்கள். 'தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது' என்பதன் உட்கருத்தை உணர்ந்தவர்கள், சாதாரணமாக இவர்களைப் பகலில் மாலை 6 மணிக்கு முன் ஊருக்குள் பார்க்க முடியாது; வயல் களில்தான் பார்க்கலாம், அரிசன்மார்கள் கூலி வேலை செய்து பிழைப்பவர்கள். உடையார்களில் பெரும்பாலோர் சொகுசான வாழ்க்கை நடத்துபவர்கள். இவர்கள் நடுவே படித்தவர்கள் ஒரு வருமிலர்; செல்வர் களும் அல்லர். கூட்டம் போட்டுக் கொண்டு (அரட்டை' அடிப்பார்கள்; எங்காவது சீட்டாடிக் கொண்டிருப்பார்கள். கவுண்டன் மார்கட்கும் உடையார் கட்கும் இந்த ஊரில் நீண்ட நாட்களாக பொதுக் காரிய விஷயமாக விரோதம் இருந்து வந்தது.