பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விநோதச் செயல்கள் 441 பத்துப் பதினைந்து ஆண்டுக' - கு முன்னர் மாரியம்மன் திருவிழா அவ்வூரில் நடைபெற்றது. உடையார்களும் கவுண்டன்மார்களும் இடத்தாலும் பிரிவுற்றிருந்தனர். ஊரின் கீழ்ப்பகுதியில் உடையார் களும் மேற்பகுதியில் கவுண்டர்களும் வாழ்ந்து வந்தனர். ஊருக்குப் பொதுவான மாரியம்மன் கோயில் ஊரின் கீழ்க்கோடியில் உடையார்கள் வாழும் பகுதியில் அமைந்திருந்தது. திருவிழாவில் கவுண்டர் கள் வாழும் பகுதிக்கு வந்த மாரியம்மன் திருவுலாவைத் தடுத்து நிறுத்தினர் உடையார்கள்; தம் பகுதிக்கும் அம்மன் எழுந்தருள வேண்டும் என்று வாதாடினர், கவுண்டன்மார். சில ஆண்டுகள் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது; நீதி மன்றத்தில் நீதி கிடைக்க வேண்டுமானால் அது பரிசுச்சீட்டுக் குலுக்கலில் பரிசு கிடைப்பது போல, பரிந்துரையும், செல்வாக்கும், பணபலமும் நீதியையே மாற்றி விடுவதை நாம் காணாமல் இல்லை. இம்மாதிரி தான் யாரோ ஒரு நீதிபதி இவருக்குப் பொதுவாகவுள்ள அம்மன் கவுண்டர் கள் வாழும் பகுதிக்குத் திருவுலாவாகப் போகும் உரிமையைக் கவுண்டர்கள் கொண்டாட முடியாது என்று 'அநியாயமாக' நீதி உரைத்து விட்டார். பதினைந்து இருபதாண்டுகளாக இவ்வழக்கின் முடிவால் அந்த ஊரில் மாரியம்மன் திரு விழாவே நின்று போயிருந்தது. 'உலகத்து நாயகியாக' இருக்கும் மாரியம்மனைப் பாரதியார் தேசமுத்து மாரியாகப் போற்றுவார். மக்கள் மனத்தில் மழைக் கடவுளாக இடம் பெற்றிருக்கும் மாரி யம்மனை ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு செல்லக் கூடாது என்று தடைவிதித்தார் நீதிபதி, மக்கள் பழக்க வழக்கங்களையும், திருவிழா மரபுகளையும் அறியாத இந்த நீதிபதி 'அநியாய நீதி' உரைத்து விட்டார். இதனால் ஊர் மக்களே மாரி யம்மனையே மறந்து விட்டனர், மாரியம்மன் கோவில் முன்