பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 நினைவுக் குமிழிகள்-1 மண்டபம் சோம்பேறிகள் உறங்கும் இடமாகவும், சீட்டாடும் களமாகவும் மாறிக் கிடந்தது. குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலேதானே இருக்கும்? இந்த வழக்கில் உரைக்கப் பெற்ற 'அநீதி' யால் உடையார்களும் மாரி யம்மன்ை மறந்தனர்; திருவிழாவும் அவர்தம் நினைவி னின்றும் நீங்கியது, கவுண்டன்மார்கள், கலகத் தரக்கர் பலர்,-எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்துமாரி! கருத்தினுள்ளே புகுந்து விட்டார்-எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி! 27 என்று பாரதியாரின் பாடற்பகுதியை நினைத்துக் கொண்டு அடங்கிப் போயினர். ' துணி வெளுக்க மண்ணுண்டு; தோல் வெளுக்கச் சாம்பலுண்டு; மணி வெளுக்கச் சாணையுண்டு' என்றெல்லாம் கூறிய பாரதியின் வாக்குகள் உழைப்பாளிக்கு நன்கு தெரியுமாதலால் “உழைப்பே வழிபாடு' என்று கோயிலை மறந்தனர். 'மனம் வெளுக்க வழி இல்லை; பேதைமைக்கு மாற்றில்லை' என்ற கவிஞரின் வாக்கே அவர் கள் அடங்கிப் போனதற்குக் காரண மாக இருக்குமோ என்று கூட எண்ணத் தோன்றுகின்றது . சேலம் கோவை மாவட்டங்களில் சித்திரை, வைகாசி மாதங்களில் மாரியம்மன் திருவிழாக்கள் கண்கொள்ளாக் காட்சிகளாக இருக்கும். வறண்டப் பகுதிகளில் இந்த அம்மனுக்கு வழிபாடுகள் அதிகமிருக்கும்; திருவிழாக்களும் சிறப்பாக இருக்கும். மாரியம்மன் அருளால்தான் மழை பெய்கின்றது என்று அதிராத நம்பிக்கையுள்ளவர்கள் உழவர் பெருமக்கள். ஒரு சமயம்-1959 மே மாதம் என்பதாக நினைவு (காரைக்குடியில் நான் பணியாற்றும்போது) - 27. பா.க.தோ.பா : முத்துமாரி-1