பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விநோதச் செயல்கள் 443 நானும் காரைக்குடிக் கம்பன் அடிப்பொடி சா. கணேசனும் திருச்செங்கோட்டில் மிகவும் கோலாகலமாக நடைபெற்ற விழாவைக் கண்டு களித்தது இப்போது (அக்டோபர் 15, 1938) நினைவுக்கு வருகின்றது. பெரும்பாலும் உழவர்களால் நடத்தப்பெறும் திருவிழாவாக இருந்தாலும் உழவர்கட்கு உறு துணையாக இருக்கும் கருமார், தச்சர், தோல்வினைஞர் போன்றோர்களும் -ஏன்? வணிகர்களும் கூடத்தான்-இவ் விழாக்களில் முக்கிய பங்கேற்பதைக் கண்டுள்ளேன் . பொட்டணத்தில் உடையார் வகுப்பைச் சேர்ந்த ஓரிருவர் நீர் இறைப்பதற்குத் துணைக்கருவிகளாகப் பயன் படும் கபிலை ஏற்றத்திலுள்ள மரஉருளைகள், சக்கரங்கள் இவற்றைக் களவாடுவது உண்டு. கவுண்டன் மார்கள் இத்தகைய அடாத செயல்களில் இறங்கினதைக் கண்டதும் இல்லை; கேட்டதும் இல்லை. என் மைத்து 6மர்க்குரிய பல கிணறுகளில் இத்தகைய சம்பவம் அடிக்கடி நிகழ்ல துண்டு. இதனால் நீர் இறைப்பதில் திடீரென்று நேரிடும் சங்கடங் களைச் சொல்லி முடியாது. ஒரு சமயம் ஒருவர் கள வாடி வைத்திருந்த உருளையையும் சக்கரத்தையும் என் மைத்துனர் பத்துப் பதினைந்து பேர் அடங்கிய கூட்டத்துடன் சென்று தமக்குச் சொந்தமான வைக்கோல் போரில் ஒளித்து வைத்திருந்ததை அம்பலப்படுத்தி விட்டார். யாரோ உடையார் சமூகத்தைச் சேர்ந்த ஓரிரு இளைஞர்கள் இழைத்த கொடுமைக்காக உடையார் சமூகமே 'அயோக்கியர்கள் நிறைந்த சமூகம் என்று கருதினார் என் மைத்துனர். இஃது என் மைத்துனரின் பெருங்குறை. சில முக்கியமான கவுண்டன்மார்களைக் கைக்குள் போட்டுக் கொண்டார்; கிராம முனிசீப் ஓர் உடையார்; நல்லவர்; சாதுவானவர். அவரையும் தம்வசப்படுத்திக் கொண்டார். இவர்களிடம் பல்லாண்டுகளாக நடத்தப்