பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 நினைவுக் குமிழிகள்-1 பெறாமல் உறங்கிக் கிடந்த மாரியம்மன் திருவிழாவை நடத்தும் திட்டத்தை அவர்கள் முன்வைத்தார். அனைவரும் ஒப்புக் கொண்டனர். விழாச் செலவுகளை ஊர்ப் பெருமக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், இது சம்பந்தமாக வழக்குகள் ஏற்பட்டால் அவற்றைத் தாம் சமாளித்துக் கொள்வதாகவும் ஒருவித வாய்ப்பேச்சாக ஒப்பந்தம் செய்து கொண்டனர். திருவிழா நாட்கள் குறிக்கப் பெற்றன - விரைவில் திருவிழாச் செய்தி தம்பட்டம் மூலம் ஊர்ப் பெரு மக்களுக்கு அறிவிக்கப்பெற்றது. சாதாரண மக்களுக்கு இதனால் ஏற்பட்ட மகிழ்ச்சி சொல்லி முடியாது. எப்படியோ 'தம்பு' (என் மைத்துனரைத் 'தம்பு' என்று வழங்குவர்; ரெட் டியார்களில் சில முக்கியமானவர்க இச்சிறப்புப் பெயரால் வழங்கப்படுவதுண்டு) முன்னின்று திருவிழா நடத்துவதை ஊர்ப் பொதுமக்கள் அறிந்து கொண்டனர். இதனால் என் மைத்துனர் அவர்களின் 'வீரவழி பாட்டுக்குரியவரானார். ஊரில் சந்து பொந்துப் பகுதிகள் யாவும் தூய்மைப் படுத்தப் பெற்றன. கவுண்டர்களின் குடியிருப்பிற்கும் ஊருக்கும் இடையில் ஓர் அகன்ற வண்டிப்பாதை இருந்தது . வண்டிபோகும் இடத்தைத் தவிர இருபுறமும் சப்பாத்தி மண்டிக் கிடந்தது. மாரியம்மன் விழா நின்ற ஆண்டு முதல் இப்பாதை பராதீனப்பட்டுக் கிடந்தது. இப்போது திருவிழா உறுதிப்பட்டமையால் நூற்றுக்கணக்கான ஊர்ப் பொது மக்கள் முன்னின்று ஒரு 100 கெஜ நீளமுள்ள பாதையைச் செப்பனிட்டனர் இருபது ஆண்டுகளாக மண்டிக்கிடந்த சப்பாத்தியும் கள்ளியும் அகற்றப்பெற்றன. பல வண்டிகளின் மூலம் மணலுள் கலவை மண் கொட்டப்பெற்று குருடனும் துணிவாக நடக்கும் அளவுக்குப் பாதை செம்மையாயிற்று, திருவிழாவில் கவுண்டர் தெருவுக்கு அம்மன் திரு வுலாவாக எடுத்துச் செல்லப்பெற்றால் உடையாரில்