பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் வளர்ந்த சூழ்நிலை 13 அப்படியே சிறிது வெப்பத்துடன் பாலைப் பருகுவேன். சில நாள் வெள்ளைப் பசுவிடம் நிற்பேன்; சில நாள் சிவப்புப் பசுவிடம் நிற்பேன். கறப்பவர்கள் என் டம்ளரில்தான் முதலில் கறந்து விடுவார்கள். மகேசுவரப் பால் பூசை காலை ஆறு மணிக்குள் எனக்குத்தான் முதலில். சுமார் ஏழு அல்லது எட்டு வயது வரைதான் என் தாய்மாமன் வீட்டி லிருந்தேன். சிறு வயதில் நான் தயிர், மோர், நெய் இவற்றை அளவுக்குமீறி உண்டதாகச் சொல்வார்கள். ஆனால் நான் நினைவு கூரும் வகையில் பால் பருகும் பழக்கத்தைத் தவிர இன்றுவரை நெய் சேர்த்துக் கொள்ளும் பழக்கமே இல்லை. ஏதோ திருஷ்டியால் நெய், தயிர், மோர் இவற்றின்மீது வெறுப்பு ஏற்பட்டு விட்டதாக என் பாட்டியும், என் அன்னையும் சொல்லி வந்ததை இன்று நினைவுகூர்கிறேன். சிறு வயதிலிருந்தே சுறுசுறுப்புடையவன் நான், சோம்பல் என்பது என்னைப் பற்றினதே இல்லை. சதா 'துரு துரு வென்றுதான் இருப்பேன். இதனால் அக்காலத் தில் அக்கம் பக்கத்தாரும் என்னை நன்கறிந்த ஊராரும் மெச்சிப் புகழ்ந்ததையெல்லாம் இன்று நினைவுகூர்கிறேன். இந்த 72-வது வயதிலும் என் சுறுசுறுப்பையும் ஓயாத உழைப்பையும் பலர் மெச்சுகிறார்கள். இதே சமயம் வினை பற்றி சைவ சித்தாந்தம் கூறும் ஆழ் கருத்தையும் நினைவு கூர்ந்து அசை போடுகின்றேன். என் பிராரத்த கருமத்தின் ஆற்றல் செயற்படுவதை நினைத்து பார்க்க முடிகின்றது. என் வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்த்தால் இந்த வினை செயற்பட்டு வந்ததைக் காணமுடிகின்றது. ஒவ்வொருவரும் தம்முடைய வாழ்க்கையை நீள் நோக்கில்-பின் நோக்கில்இதனைக் கவனித்தால் வினைபற்றிய பல உண்மைகள் தெளிவாகும். –2–