பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 நினைவுக் குமிழிகள்-1 உணவு முறைகள் : அந்தக் காலத்தில் அந்தச் சிற்றுாரில் பெரிய செல்வர்கள் வீடுகள் உட்பட மதிய உணவு கம்பு, கேழ்வரகாலான மாவினால்தான் தயார் செய்யப்படும். அரிசிச் சோறு அவர்கள் வீட்டில் காண்பதென்பது குதிரைக் கொம்பு. இதற்கு அதிகக் காய்கறி வகையறா தேவை யில்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம்; தம் வயலில் வந்த தானியங்களையெல்லாம் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என்ற கருத்தாகவும் இருக்கலாம். தவிர, மறுநாள் பழையதுக்கும் சுகமாக இருக்கும் என்ற எண்ணத் திலும் இம் முறையை மேற்கொள்ளலாம். என் தாய்மாமன் வீட்டிலும் இந்த உணவு தயாரிக்கப்படுவது உண்டு. வேண்டுவோர் இதனை உண்ணலாம். ஆனால் எனக்காக என் பாட்டியார் அரிசிச் சோறு, பருப்பு, குழம்பு, ரசம் முதலியன தயாரிப்பார்கள். நான் மட்டிலும் இவற்றை உண்பேன். மறு நாள் பழையதற்கு கம்பங்கூழ்", கேழ்வரகுக்கூழ் இவை எனக்கு தேவாமிர்தமாக இனிக்கும். ஊரிலே மிகவும் செல்வர் ஒரு செட்டியார். ஏராளமான நிலபுலங்கள் அவருக்கு உள்ளுரிலும் உண்டு; சமயபுரத் தருகிலும் ஆற்றுப் பாசன வசதிகளுடன் ஏராளமான நஞ்சை நிலங்களும் அவருக்குச் சொந்தமாக உள்ளன. அவர் வீட்டிலும் மதிய உணவு கம்பு, கேழ்வரகாலான உணவே. சில இளவட்டங்கள் இதைக் குறைவாகப் பேசுவதை நான் கேட்டதுண்டு. பணக்காரர் அறுசுவை உண்டி’ உண்ண வேண்டும் என்பது இவர்கள் கணிப்பு போலும் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய தத்துவங்களுள் "சிக்கனம் என்பதும் ஒன்று, சிக்கனம், வேறு கஞ்சத் தனம் வேறு. இந்தச் செட்டியார் வீட்டில் பின்னதுதான் தலை தூக்கி நிற்கும். பணம் சேர்ப்பதில், சொத்து சேர்ப் பதில் இவருக்கு உள்ள ஆர்வம், பொருளைத் துய்ப்பதில் ' இவரிடம் இருந்ததில்லை. என் செய்வது?