பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடக்க நிலைக் கல்வி 19 வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி’ தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது என்றல்லவோ வகுத்துக் காட்டியள்ளார் வள்ளுவப் பெருந் தகை? குமிழி-3 3. தொடக்கநிலைக் கல்வி ஐந்தாண்டு நிறைவு பெறும் தருவாயில் எனக்கு வித்தியாப்பியாசம் நடைபெற்றது. இது என் தாய் மாமன் இல்லத்தில் சிறிது வைதிகச் சடங்குகளுடன் நடைபெற்றதை நினைவுகூர முடிகின்றது. ஒரு நன்னாளில் திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர் இலிங்கச் செட்டியார்தான் இதனை நடத்தி வைத்தார். அன்று வீட்டிலும் வீட்டிலுள்ளோ ரிடத்தும், வந்து நிகழ்ச்சியைச் கண்ணுற்ற அக்கம் பக்கத் தார் முகத்திலும் ஒருவித மகிழ்ச்சிக் களை தட்டியிருந்தையும் நினைந்து பார்க்க முடிகின்றது. ஆசிரியர் மஞ்சள் தடவிய அளவுபடுத்தப் பெற்றுத் தயாரித்த நான்கைந்து பனையோலை அடங்கிய ஒரு சிறு கட்டில் முதல் ஏட்டில் ‘ஹரி நமோத்து சிந்தம்’ என்று எழுதித் தந்ததும், சருக்கரை கலந்த காய்ச்சிய பாலில் ஏதோ மந்திரம் எழுதிப் பருகச் செய்ததும், அதன் மேற்படி யேட்டில் எழுதியதைத் தனித்தனி எழுத்தை மூன்று முறையும், சேர்த்து வாசகமாக மூன்று முறையும் ஆசிரியர் சொல்ல அப்படியே என்னைத் தொடர்ந்து சொல்லும் படி செய்ததும் இவையாவும், ஒரு சிறு விநாயகர் வழிபாட்டிற்குப் பின்னரே நடைபெற்றதும் நினைவுக்கு வருகின்றன. மறு 2. குறள்-377