பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 நினைவுக் குமிழிகள்-1 நாள் தொடங்கி பள்ளிக் கூடத்திற்கு முற்பகலும் பிற் பகலும் ஒழுங்காகப் போய் வந்ததும் நினைவுக்கு வருகின்றது. கல்வி முறை: பள்ளிக்குச் சென்று வந்த சில நாட் களிலேயே ஆசிரியர், மாணாக்கர் இவர்களின் கவதைதை ஈர்க்கச் செய்தேன். என்னுடைய சுறுசுறுப்பும், படிப்பில் காட்டிய மிக்க ஆர்வமும், ஒழுங்கு தவறாமல் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே பள்ளியில் இருப்பதும் எல்லோரும் மெச்சக் காரணமாக இருந்தன. சில திங்களில் தமிழ் நெடுங் கணக்கைப் படிக்கவும், எழுதவும், கற்றுக் கொண்டமை அனைவரையும் வியக்க வைத்தன. ஓராண்டுக்குள் 1 -10 வரை வாய்ப்பாடு பாடமாகி விட்டது. இன்றைய அரசுப் பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளிலும் வகுப்பிற்கொரு ஆசிரியர் இருப்பதுபோல் இருக்க வேண்டும் என்றகட்டாயம் என் பள்ளியில் இல்லை. ஆண்டுதோறும் தேர்வுகள் வைத்துத் தேறியவர்களை வ கு ப் பு ய ர் வு செய்யும் வழக்கம் இந்தத் திண்ணைப் பள்ளியில் இல்லை. முதலாண்டில் மணலில்தான் எண்களையும் எழுத்துகளையும் எழுதிக் கற்கக் வேண்டும். இரண்டு அல்லது மூன்றாவது ஆண்டில்தான் கற்பலகை, பலப்பம் ஆகியவற்றைப் பயன் படுத் தும் முறை தொடங்கும். அடுத்த ஆண்டில் பென்சிலைக் கொண்டு குறிப்பேட்டில் எழுதும் முறையும் தோன்றும். இதில் ஒரளவு கை தேர்ந்ததும் ரிலீப்முள் (Relief nib) பதித்த பேனாவினால் ஆசிரியரே கடுக்காயைக் கொண்டு காய்ச்சிச் சுட்ட மண்ணாலான மைக்கூட்டில் வழங்கும் மையைத் தொட்டு எழுதும் பயிற்சியும் தொடங்கும், முதலில் நான்கு கோடுகளும், பிறகு மூன்று கோடுகளும், அதன் பிறகு இரண்டு கோடுகளும், பின்னர் ஒருகோடுமாகப் போடப் பெற்றுள்ள குறிப்பேடுகள் பயன் படுத்தப் பெறும். பயிற்சியில் முன்னேற்றத்திற்கேற்றவாறு தேவையான கால கட்டத்தில் இவற்றை ஆசிரியர் பயன்படுத்தச் செய்வார். மணலில் எழுதும்போதும், கற்பலகையில் பலப்பத்தைக் கொண்டு