பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடக்கநிலைக் கல்வி 21 எழுதும்போதும், தாளில் பென்சிலால் எழுதும்போதும் ஆசிரியர் எழுத்தின் வடிவத்தில் கவனம் செலுத்தித் திருத்து வார். இதனால் எழுத்தின் சரியான வடிவம் சிறுவர்களின் மனத்தில் நன்கு பதியும். எழுதும்போது உட்கார்ந்து எழுதவேண்டிய நிலையைக் காட்டுவார். நேராக உட்கார்ந்து எழுதுமாறு வற்புறுத்து வார். உட்காருவது மாணாக்கர்கட்குச் சுகமாக இருக்கும் நிலையைக் காட்டி விளக்குவார். பலப்பம், பென்சில், பேனா இவற்றைக் குழந்தைகள் பிடித்தெழுதும் நிலையை நன்கு கண்காணிப்பார்; உடனுக்குடன் திருத்தவும் செய்வார். எழுத்துகளுக்கு இடையிலும், வரிகளுக்கு இடையிலும் சிறிது இடம் விட்டு எழுதும் பழக்கத்தைத் தொடக்கத்திலிருந்தே வற்புறுத்துவார். இதனால் குழந்தைகளின் கையெழுத்து முத்துக் கோத்தாற்போல் அழகாக அமைய ஏதுவாயிற்று. இலிங்கச் செட்டியாரின் தொடக்கநிலைக் கல்வித்திட்டம் இக்காலத்தில் மிகச் சிறந்ததெனக் கருதப்பெறும் டால்ட்டன் திட்டம் என்ற அமெரிக்கக் கல்வித் திட்டத்தோடு ஓரளவு ஒப்பிட்டுப் பேசக் கூடியதாக இருந்தது. டால்ட்டன் திட்ட அமைப்பைப் போலவே செட்டியார் திட்டத்திலும் வகுப்பு அறைகள் இல்லை; பாடவேளைப் பட்டிகள் (Time.tables) இல்லை; தேர்வுகள், வகுப்பு மாற்றம் முதலிய அதிர்ச்சி தரும் நிகழ்ச்சிகள் இல்லை; வகுப்பு ஆசிரியர் என்ற ஒருவர் இல்லை. இலிங்கச் செட்டியார் மேற்குப் புறமாகத் திண்ணை யோரத்தில் கல்லாவின் புடையமர்ந்த தென்முகக் கடவுள் போல் பனையோலையால் பின்னப்பெற்ற தடுக்கொன்றின் மீது வீற்றிருப்பார். இந்த நிலையிலேயே அனைத்தையும் கவனித்துக் கொள்வார். சில சமயம் ஊர்க்காரர்களுக்குப் புரோநோட்டுகள் எழுதுதல், கடிதங்கள் எழுதுதல் போன்ற 'சமூகத் தொண்டும் நடைபெறும், இது பள்ளிலுேலைக்குச்