பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 நினைவுக் குமிழிகள்-1 சிறிதும் இடைஞ்சலாக இராது. வருகிறவர்களிடம் வீணாக அரட்டை அடிப்பதில்லை. ஒன்றிரண்டு பேச்சுடன் அனுப்பி விடுவார். கா. நமச்சிவாய முதலியாரால் எழுதப்பெற்ற புகழ் பெற்ற பாட நூல்கள்தாம் புழக்கத்தில் இருந்தன. அறிவியல், புவியியல், சமூகஇயல் போன்ற பாடநூல்கள் இங்குத் தலை காட்டுவதே இல்லை. உலகநீதி, ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றிவேற்கை, நல்வழி, நன்னெறி, விவேக சிந்தாமணி போன்ற நீதி நூல்களும்; அருணகிரி அந்தாதி: அறப்பளிசுவர சதகம், குமரேச சதகம் போன்ற நூல்களும் கற்பிக்கப் பெற்றன. மாணாக்கர்கள் தங்கள் அறிவிற்கேற்ப, சுறுசுறுப்பாகப் படிக்கும் திறனுக்கேற்ப இந்நூல்களை ஒன்றன்பின் ஒன்றாகப் படித்துக் கொண்டே போகலாம். இவற்றை ஆசிரியர் மாணாக்கர்கட்குத் தனித்தனியே கற்பிப்பார். சில பாடல்கள் : சதகங்களில் பல பாடல்கள் அப்போது மனப்பாடம். அவற்றுள் இரண்டு பாடல்கள். இப்போது நினைவிற்கு வருகின்றன. பொருள் செயல் வகை பற்றி ஒரு பாடல் : புண்ணிய வசத்தினால் செல்வமது வரவேண்டும்; பொருளை ரட்சிக்க வேண்டும்; புத்தியுடன் அதுஒன்று நூறாக வேசெய்து போதவும் வளர்க்க வேண்டும்; உண்ணவேண்டும் பின்பு நல்லவஸ்த் ராபரணம் உடலில் தரிக்க வேண்டும்; உற்றபெரி யோர்கவிஞர் தமர்ஆது லர்க்குதவி ஓங்கும்புகழ் தேட வேண்டும்;