பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடக்கநிலைக் கல்வி 23 மண்ணில் வெகு தருமங்கள் செயவேண்டும்; உயர்மோட்ச வழிதேட வேண்டும்; அன்றி வறிதிற் புதைத்துவைத் தீயாத பேர்களே மார்க்க மறியாக் குருடராம்: அண்ணலே! கங்கா குலத் தலைவன் மோழை தரும் அழகன் எம தருமை மதவேள் அனுதினமும் மனதில் நினை தருசதுர கிரிவளர் அறப்பளிசுர தேவனே." (ஆதுலர் - தரித்திரர்) இன்னொரு பாடல்; இதற்கு இது வேண்டுமெனல் பற்றியது. இப் பாடல்: தனக்குவெகு புத்தியுண் டாகினும் வேறொருவர் தம்புத்தி கேட்க வேண்டும்: தானதிக சூரனே யாகினுங் கூடவே தளசேக ரங்கள் வேண்டும்; கணக்கின்ற வித்துவா னாகிலுந் தன்னினுங் கற்றோரை நத்த வேண்டும்; காசினியை ஒருகுடையி லாண்டாலும் வாசலிற் கருத்துள்ள மந்திரி வேண்டும்; தொனிக்கின்ற சங்கீத சாமர்த்திய னாகிலுஞ் (சுதிகூட்ட ஒருவன் வேண்டும்; சுடர்விளக் காயினும் நன்றாய் விளக்கித்) துண்டுகோ லொன்று வேண்டும்; அனற்கண்ண னே! படிக சங்கநிநர் வண்ணனே! ஐயனே யருமை மதவேள் அனுதினமு மனதில் நினை தருசதுர கிரிவளர் அறப்ப ரீசுர தேவனே. 3 அம்பலவாணக் கவிராயர், அறப்பளிசுர சதகம்.7 4. അു. 36.