பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 நினைவுக் குமிழிகள்-1 'விவேக சிந்தாமணி’ என்னும் நூலில் பல பாடல்கள் மனப்பாடம், அவற்றில் இரண்டு மூன்றை நினைவு கூர்கின்றேன். ஒப்புடன் முகமலர்ந்தே உபசரித்து உண்மைபேசி உப்பிலாக் கூழிட்டாலும் உண்பதே அமிர்தமாகும்; முப்பழ மொடுபாலன்ன முகங்கடுத் திருவராயின் கப்பிய பசியினோடு கடும்பசி யாகுந்தானே." சந்திக்கல் அருகிலுள்ள பல பெரியோர்கள் என்னை அழைத்துச் சில பாடல்களைக் கூறும்படி கேட்பார்கள்; நான் பிழையின்றி ஒப்புவித்தலைக் கேட்டு மகிழ்வார்கள். அடிக்கடி சொல்லும் இன்னொரு பாடல் : நாய்வாலை அளவெடுத்துப் பெருக்கித் தீட்டி நற்றமிழை எழுதஎழுத் தாணி யாமோ? பேய்வாழும் சுடுகாட்டைப் பெருக்கித் தள்ளி பெரியவிளக் கேற்றி வைத்தால் வீடதாமோ? தாய்வார்த்தை கேளாத சகசண் டிக்கென சாற்றிடினும் உலுத்தகுணம் தவிர மாட்டான்; ஈவாரை ஈயவொட்டான்; இவனும் ஈயான்; எழுபிறப்பி னுங்கடைய இவன்பி றப்பே." (உலுத்த குணம்-உலோப குணம்) இந்தப் பாடலைச் சொன்னதைக் கேட்டவுடன் மகிழ்ந்த பெரியோர்கள் பலர் என் மனக்கண்முன் நிற்கின்றனர். 5. விவே. சிந்தா, 7 θ, டிெ 14