பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடக்கநிலைக் கல்வி 25 ஆவீன மழைபொழிய இல்லம் வீழ அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ மாவீரம் போகுதென்று விதைகொண் டோட வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ள கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக் குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்கப் பாவாணர் கவிபாடிப் பரிசு கேட்கப் பாவிமகன் படுந்துயரம் பார்க்கொணாதே. இந்தப் பாட்டைக் கேட்டவர்கள் நான் அடிக்கடி சந்திக்கும் போதெல்லாம் கூறக்கேட்டு மகிழ்வதை இன்றும் நினைத்துப் பார்க்க முடிகின்றது. பள்ளி நடைமுறை : பள்ளி நடைமுறை விநோதமாக இருக்கும். மாணாக்கர் அதிகாலையில் இருட்டோடு வந்து விடுவார்கள். முதலில் வருபவன் நான்தான் சரசுவதி' என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வான். நான் பல முறை சரசுவதி ஆனதை நினைவுகூர்கின்றேன். ஆசிரியர் வாராமலேயே முறைவைப்பு’ என்ற ஓர் அருமையான சடங்கு ஒழுங்காக நடைபெறும். இந்த முறைவைப்பில் அ, ஆ...என்று ஒவ்வோர் எழுத்தாக ஒரு மாணாக்கன் சொல்லுவான். மாணாக்கர்கள் அனைவரும் சேர்ந்தாற் போல் இவனைப் பின்பற்றிச் சொல்வார்கள். சில நாட்கள் தமிழ் நெடுங்கணக்கு முழுவதும் இவ்வாறு முறை வைக்கப் பெறும். சில நாட்கள் கிழமைகளின் பெயர்கள், மாதங்களின் பெயர்கள் (சித்திரை, வைகாசி... ..... ஜனவரி, பிப்பிரவரி...) ஆண்டுகளின் பெயர்கள் (பிரபவ, விபவ ...) நட்சத்திரங் களின் பெயர்கள் (அசுவனி, பரணி...... ) திதிகளின் பெயர் கள் (பிரதமை, துவிதை......) இந்த முறை வைப்பினாலேயே மாணாக்கர்கட்கு மனப்பாடமாகி விடும். தொடக்கத்தில் 7. டிெ, 77