பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 நினைவுக் குமிழிகள்-1 இது குருட்டுப் பாடம்போல் தோன்றினாலும் நாளடைவில் மாணாக்கர்கள் அடையும் நடைமுறைப் பயன் அளவிடற் கரியது. இந்தமுறை வைப்பிலேயே மாணாக்கர்கள் வாய்பாடு, கொன்றை வேந்தன். வெற்றிவேற்கை முழுவதையும் கற்றுக் கொண்டு விடுவார்கள். எழுத்துகள் கற்கும் நிலையி லுள்ள மாணாக்கர்கள் கூட இந்த முறைவைப்பில் கலந்து கொள்வதால் எழுத்துகளைக் கற்பதற்கு முன்னதாகவே ‘ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்', 'ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் என்பன போன்ற நீதி களைப் பொட்டைப் பாடமாக ஒப்புவிப்பதால் இதனைக் கேட்கும் பெற்றோர்கள் பெருமகிழ்ச்சி அடைவார்கள். "செந்தமிழும் நாப்பழக்கம் அல்லவா? இந்த முறை வைப்பினால் சிறுவர்களின் நாக்கு நன்கு திருந்தும். முறை வைப்பு காலை ஏழு மணி வரை நடைபெறும். இக்காலத்தில் ஆசிரியர் பெரும்பாலும் இருப்பதில்லை. தலைமை மாணவன் இதனை ஒழுங்காக நடத்தி விடுவான். ஏழு மணிக்கு மாணாக்கர்கள் வீடு திரும்பி விடுவார்கள். மீண்டும் காலை உணவிற்குப்பின் எட்டரை-ஒன்பது மணிக்குள் திரும்பி விடுவார்கள். இப்போது ஆசிரியர் இருப்பார். பாடங் களைக் கவனிப்பார். திங்கள்தோறும் ஒருமுறை சிறுவர்கள் எழுதும் மணலை மாற்ற வேண்டும். புழுதி நிறைந்த மணலில் இருப்பது உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் அல்லவா? மணலை சுமார் ஒரு கல் தொலைவிலுள்ள ஓர் சிற்றாற்றிலிருந்து கொணர்தல் வேண்டும். சிறுவர்களாகிய நாங்களே இதனைக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். ஒவ்வொருவரும் வீட்டிலிருந்து விதைப் பொட்டி (மிகச் சிறிய பொட்டி-விதைகளைக் காட்டில் தெளிக்கப் பயன்படுவது) கொண்டு வருவோம். அதிகாலை ஐந்தரை மணிக்கே பள்ளிக்கு வந்து விடுவோம்.