பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடக்கநிலைக் கல்வி 27 அன்று முறை வைப்பு பள்ளியில் இல்லை. இரண்டு பேர்கள் வீதம் வரிசையாக அமைந்து செல்வோம். ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்"...என்று முன் வரிசையி லுள்ளவன் சொல்ல பின் வரிசையிலுள்ளவர்கள் சேர்ந்து சொல்ல இப்படிச் சொல்லிக் கொண்டே ஆறுவரையில் செல்வோம். அங்குத் தனித்தனியாகப் பிரிந்து சேடலற்ற நல்ல மணலை விதைப் பொட்டியில் நிரப்பிக் கொண்டு மீண்டும் ஓரிடத்தில் கூடுவோம். இரண்டு பேர் வீதம் வரிசை யாக நின்று கொண்டு முறைவைப்புடன் பள்ளி திரும்புவோம். இந்த முறை விநாயகர் அகவல் முறை வைப்பில் இடம் பெறும். தொடக்கத்தில் இது எல்லோர் வாயிலும் நுழைவதற்குச் சிறிது சிரமமாக இருப்பினும் நாளடைவில் தண்ணிபட்ட பாடாய் விடும். உளறிக் கொட்டும் புதிதாய்ச் சேர்ந்த சிறுவர்கள் கூட நாளடைவில் நன்கு பின்பற்றிச் சொல்வதைக் காணலாம். இந்த முறைவைப்பை இக்காலக் கல்வி முறைகளுள் ஒன்றாகிய விளையாட்டு முறையில் அடக்கிக் கூறலாம் . உளவியற்கலை விரிவடைந்த பிறகு இயல்பூக்கங்கட்கும் (lnstinct) அறிவு நிலைக்கும் உள்ள தொடர்பைக் காண விழைந்த முயற்சியே இதன் வடிவமாக அமைந்தது. இம் முறையில் ஒரு கடமையை நிறைவேற்றும் பொழுது கடமை திறமையாக முடிவடைவதுடன், அதனை நிறைவேற்றுவதில் ஓர் இன்பத்தையும் பெற முடிகின்றது. விளையாட்டு முறை உற்சாகமற்ற வேலையையும் உற்சாகத்துடன் செய்வதற்கு ஒருவித மனப்பான்மையைத் தருகின்றது. "வேலையையும் விளையாட்டையும் வேறுபடுத்திக் காட்டுவதென்பது எளிதன்று; இவற்றிற்கு விளக்கம் தருவது கடினமே. வேலை வாழ்வுடன் இணைந்த ஒரு புறம்பான செய்கை; ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைத் தேவையை வேலை முற்றுவிக் கின்றது. ஆனால் விளையாட்டில் புறம்பான நோக்க