பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நினைவுக் குமிழிகள்-1 மொன்றும் இல்லை; இஃது ஒருவருடைய மகிழ்ச்சியின் பொருட்டே மேற்கொள்ளப்படுகின்றது. வேலை மகிழ்ச்சி யுடன் விரும்பி ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. விளையாட்டு மகிழ்ச்சியுடன் விரும்பி ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. வேலையின் பயனைக் கண்ட பிறகுதான் மகிழ்ச்சி உண்டா கின்றது; விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் பொழுதே மகிழ்ச்சி ஏற்படுகின்றது. வேலை புறம்பான கட்டுப்பாடு களால் மேற்கொள்ளப்படுவது; விளையாட்டில் பல கட்டுப்பாடுகள் இருப்பினும் இவை விளையாடுபவர்களே ஏற்படுத்திக் கொண்டவை. வேலை உண்மை வாழ்வை யொட்டியது; விளையாட்டு பாவனை உலகைச் சார்ந்தது. இவ்வாறு ஒன்றையொன்று பிரித்தறியலாம் எனினும்: அடிப்படையான உண்மையொன்று உண்டு. இந்த வேறுபாடு கள் யாவும் செயல்களில் இல்லை; இவற்றில் ஈடுபடுபவர்களின் மனப்பான்மையைப் (Attitude) பொறுத்துள்ளது. எத் தொழிலையும் நாமே ஏற்று மகிழ்ச்சியுடன் ஆற்றத் தொடங்கினால் அஃது ஒரு பளுவாகத் தோன்றுவதில்லை; இத்தொழிலை மேற்கொள்ளும்பொழுது நம் இயல்பூக்கங்கள் திருப்தியடைந்தால் அது நமக்கு விளையாட்டாகவே தோன்றும். எனவேதான், உலகில் நடைபெறும் செயல் களனைத்தையும் ஆண்டவன் அலகிலா விளையாட்டாகச்' செய்து வருகின்றான் என்ற உண்மையையும் இலக்கியங்களில் காண்கின்றோம்.' இங்ங்னம் விளையாட்டுபோல் தோற்றுவிக்கப் பெற்ற இந்த முறைவைப்பினால் தமிழ்மொழி, கணக்கு, நீதிகள், எதிலும் ஒர் ஒழுங்கு முறை, நாப்பழக்கம், ஒற்றுமை, பொதுநலனுக்கு உழைத்தல் முதலிய பல நற்பண்புகள் ஏற்பட வழியமைகின்றதைக் காண்கின்றோம். முதலில் 8. சுப்புரெட்டியார், ந: தமிழ் பயிற்றும் 50 (மூன்றாம் பதிப்பு) பக். 83.84 லும முறை