பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடக்கநிலைக் கல்வி 29 ‘குருட்டுப் பாடம் போல் தோன்றினும் பிற்காலத்தில் இதன் பயன் தெரியும். என்னைப் பொறுத்தமட்டிலும் இது நன்கு தெரிகின்றது. நினைவாற்றல் வளர்வதற்கு நல்ல பயிற்சி யாகவும் அமைகின்றது. சர்வம் விஷ்ணுமயம் ஜகத்’ என்பது ஒரு வேதவாக்கு, மெய்விளக்க அறிஞர்கட்குத்தான் இதன் உண்மை புலனாகும். ஆனால் எங்கும் பிள்ளையார் மயம்' என்பதைச் சிறுவர்கள் நன்கு அறிவார்கள். அரசமரத்துப் பிள்ளையார் முதல் அவ்வப்போது நாம் படைத்து மகிழும் பிள்ளையார் வரை (மஞ்சள் பிள்ளையார், சாணப் பிள்ளையார்) நன்கு அறிந்தவர்கள். எந்தக் கோயில் இருந்தாலும் இராவிட்டாலும், எல்லா ஊரிலும் பிள்ளையார் கோயில் கட்டாயம் இருக்கும். பிள்ளையாரைப் போற்றுகின்ற சிறுவர்கள் ஆற்றலை யும் அறிவையும் பெறுவார்கள் என்ற தத்துவத்தில் பெரு நம்பிக்கை கொண்டவர் இலிங்கச் செட்டியார். இதனால் சிறு வயது முதலே விநாயகர் அகவலை விளையாட்டுபோல் கற்பிப்பதில் முறைவைப்பு' முறையை நுழைத்தார். அகவலில் அடங்கிய தத்துவம் புரியாவிட்டாலும் விநாயகர் வடிவத்தைக் காட்டும் முற்பகுதி ஓரளவு சிறுவர்கட்கு நன்கு தெளிவாகும். பள்ளியிலிருந்து மணல் கொள்ளப் புறப்படும் போது, ஊரைத் தாண்டாத நிலையில், சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பல்இசை பாடப் பொன்அரை ஞானும் பூந்துகில் ஆடையும் வன்ன மருங்கில் வளர்ந்து அழகெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்கு சிந்துாரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்