பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 நினைவுக குமிழிகள்-1 நான்ற வாயும் நால்இரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழ்ஒளி மார்பும் சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறே! முப்பழம் நுகரும் மூஷிக வாகன! என்ற அடிகள் பாடப்பெறுகின்றன. சிறுவர்கள் இவற்றை உரத்துப் பாடுகின்றனர். இதனைக் கேட்கும் மூத்தோர் முதலியவர்கள் மிகவும் மகிழ்கின்றனர். மணல்வெளியை அடைவதற்குள் மூன்று முறை அகவல் பாடப்பெற்றுவிடும். மணல்வெளியை அடையும் போது, கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலைஅறி வித்துத் தத்துவ நிலையைத் தந்து எனை யாண்ட வித்தக விநாயக! விரைகழல் சரணே! என்ற அடிகளைப் பாடி முடிப்பர். " அப்பாடா! என்று விதைப் பொட்டிகளைக் கீழே போட்டு மணலில் அமர்வர். சிறுவர்கள் தனித்தனியாகப் பிரிந்து நல்ல மணலைத் தேர்ந்தெடுத்துப் பொட்டியை நிரப்பிக் கொண்டு திரும்பவும் கூடி வரிசையாக நின்று கொள்வார்கள். 'சீதக்களப' என்று தொடங்கி முறைவைப்புடன் திரும்புவார்கள். பள்ளியை வந்தடையும்போது வித்தக விநாயக விரைகழல் சரணே!’ என்று முடியும் பெரிய ஒலியுடன்."பள்ளியில் சேர்ந்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் இந்த முறைவைப்பு என்னைச் சார்ந்து விட்டது. அகவலைப் படிக்கத் தெரியாவிட்டாலும் மனப்பாடம் ஆகிவிட்டது. நான் நன்றாகப் பாடுவதாக எண்ணி எனக்கே அந்தப் பொறுப்பை வழங்கி விட்டார்