பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடக்கநிலைக் கல்வி 3i ஆசிரியர். நாளடைவில் எல்லா நிகழ்ச்சிகளை நடத்தும் பொறுப்பும் எனக்கே வழங்கப்பட்டது. அந்தச் சிறுவயதில் நான் பெற்ற பொறுப்பை இன்று நினைந்து பெருமிதம் கொள்ளுகின்றேன். இலிங்கச் செட்டியார் விரும்புகிறவர்கட்குத் தெலுங்கும் கற்பிப்பார். கா. நமச்சிவாய முதலியார் எழுதிய தமிழ்ப் பாடல் நூல்களின் தெலுங்கு மொழியாக்க நூல்கள் புழக்கத்திலிருந்தன. வெள்ளைக்காரர் ஆட்சியில் மொழியின் அடிப்படையில் மாநிலப் பிரிவு இல்லையாதலால் முதலியார் அவர்களின் நூல்கள் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்ற மூன்று மொழிகளிலும் மொழி பெயர்த்திருக்க வேண்டும் என நினைக்கத் தோன்றுகின்றது. சென்னை மாகாணம் முழுவதும் நான்கு மொழிகளிலும் இவரது பாட நூல்களே ஏகபோக உரிமையாகப் புழக்கத்தில் இருந்திருக்க வேண்டும்; இதனால்தான் அவருக்குச் செல்வச்செழிப்பும் இருந்தது. சிறந்த புலமையுடன் வள்ளண்மையும் இணைந் திருந்தமையால் வறுமையால் வாடும் பல புலவர்கள் இவரிடம் உதவி பெற்று மகிழ்ந்தனர். சென்னைக் கடற்கரை யில் அமைந்திருந்த இவர்தம் திருமாளிகைக்குப் புலவர் பெருமக்கள் சதா வருவதும் போவதுமாக இருக்கும் என்பதை அறியும்போது முதலியாரவர்களின் வள்ளண்மை தெளிவாகும். இது நிற்க. முதலியார் அவர்களின் தெலுங்கு மொழி பெயர்ப்பு நூல்களையே செட்டியாரவர்களும் எங்களை வாங்கச் செய்து அவற்றைக் கற்பித்தமையால் தெலுங்கு கற்றல் எளிதாக இருந்தது. இவற்றைத் தவிர "பெத்த பால சிட்ச (பெரிய பாலர் பயிற்சி நூல்) என்ற நூலையும் வாங்கச் செய்து அவற்றையும் பயன்படுத்துவார். ஓராண்டுதான் ஏனைய பாடங்களுடன் தெலுங்கும் பயின்றேன். பெரகம்பியிலிருந்து கோட்டாத்துர் வர