பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 நினைக்குமிழிகள்-1 நேர்ந்தமையால் தெலுங்கு மொழிப் பயிற்சி வீண் போயிற்று. எல்லாவற்றையும் மறந்தேன். என் செய்வது? அதனைக் கற்கும் ஊழ் இல்லை போலும்’ என எண்ணு கின்றேன். குமிழி-4 4. திண்ணைப்பள்ளி நிகழ்ச்சிகள் 9-೧,ಸà: செட்டியார் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் நடைபெறும் சிறப்பான நிகழ்ச்சிகளாகச் சொல்ல வேண்டு மானால் பிள்ளையார் சதுர்த்தி, சரசுவதி பூசை ஆக இரண்டைச் சொல்லலாம். எந்த விழாவாக இருந்தாலும் அவற்றில் பள்ளியில் பயிலும் சிறுவர், சிறுமியர் அனைவரை யும் அவற்றில் தொடர்பு கொள்ளச் செய்வதில் அதி சமர்த்தர் திரு. செட்டியார். சென்னை போன்ற நகரங்களில் மண்ணாலான பிள்ளையார் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க்கு விற்கப் பெறுவதுபோல் அந்தச் சிற்றுாரில் பிள்ளையார் விற்பதில்லை. திரு. செட்டியார் அவர்களே மிக அற்புத மாகப் பிள்ள்ை யாரை உருவாக்கி விடுவார். பிள்ளையார் சதுர்த்திக்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்னதாகவே சில பெரிய பிள்ளைகளைக் கொண்டு ஏரியிலிருந்து களிமண் கொணரச் செய்வார். பள்ளியில் கிடைக்கும் மணலில் நுண் மணலைச் சலித்தெடுத்து களிமண்ணோடு கலந்து, அவை நன்றாகக் கலக்குமாறு நீர் விட்டுப் பிசைந்து உருவம் அமைப்பதற்கு ஏற்றவாறு செய்து கொள்வார். தேவையான அளவு உருவத்திற்கேற்ப இரண்டு கையாலும் மண்ணை எடுத்துக் கொண்டு இரண்டு கை களாலும் அமுக்கி ஒரு கரட்டு உருவத்தை அமைத்து விடுவார். பிள்ளையாரின் இருபுயங்கள், கிரீடம் உள்ள தலை இவை