பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திண்ணைப் பள்ளி நிகழ்ச்சிகள் 33 கிட்டத்தட்டச் சரியாக அமைந்து விடும். அதன் பிறகு முகம், துதிக்கை, கைகள் இவற்றைச் சரிசெய்து விடுவார். மணல் கலந்திருப்பதால் இரண்டு மூன்று நாட்களுக்குப் பிள்ளையார் வெடிக்காமல் இருக்கும். அதற்குப் பிறகுதான் அது நீர்ப் பிரளயத்தில் கலக்கப் போகின்றதே. பிள்ளைகளில் படைப்பாற்றலைக் கருவிலே கொண்டவர் கள் மீதியுள்ள மண்ணை எடுத்துத் தாமே பிள்ளையார்களை அமைக்க முற்படுவார்கள். சிறுவயதில் போலச்செய்தல்' (imitation) என்ற பண்பு எல்லோரிடமும் காணப்பெறும், பெரியவர்கள் செய்வதையெல்லாம் கூர்ந்து நோக்கி அவர்கள் செய்வதையே தாமும் செய்ய வேண்டும் என்று செய்ய முயல்வது குழந்தைகளின் இயல்பு என்பதை உளவியல் வல்லுநர்கள் விளக்கியுள்ளனர். இன்றும் புதுமுறைகளில் நகரங்களில் இயங்கும் குழந்தைப் பள்ளிகளில் (Kinder garten Schools) படங்கள் வரைதல், அச்சிட்ட படங்களைக் குறிப்பேடுகளில் ஒட்டிப் பார்வைக் குறிப்பேடாக்குதல் (Album), களிமண்ணைக் கொண்டு உருவங்கள் அமைத்தல் போன்ற செயல்களில் குழந்தைகளை ஈடுபடுத்தி இளம் வயதிலிருந்தே படைப்பாற்றல் அவர்களிடம் வளர்வதற்கு வாய்ப்புகள் அமைத்துத் தருவதைக் காணலாம். பிள்ளையார் சதுர்த்தியன்று ஆசிரியர் செய்த பிள்ளையார் வழிபாட்டிற்கு வைக்கப்பெறும். சிறுவர்கள் செய்தவற்றில் நல்லனவற்றைத் தேர்ந்தெடுத்து அவையும் ஆசிரியர் செய்த பிள்ளையாரின் அருகில் வைக்கப்பெறும். பிள்ளையார் சதுர்த்தியன்று ஆகும் செலவிற்குப் பிள்ளைகளே தலைக்கு ஓரணா, இரண்டனா என்று தந்துவிடுவார்கள். பெற்றோர்களும் மகிழ்ச்சியுடன் இச்சிறுதொகையைத் தம் பிள்ளைகள் மூலம் அனுப்பிவிடுவார்கள். மாணாக்கர்களே அறுகம்புல் சேகரித்து விடுவார்கள். சந்தனம் அரைத்தலில் ssكه و... میس--