பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 நினைவுக் குமிழிகள்-1 அவர்களே ஈடுபட்டு சந்தனக்குழம்பைத் தயாரித்துவிடுவார் கள். பொரி, கடலை, அவல், நாட்டுச் சருக்கரை கலந்து பெரிய தட்டில் வைக்கப்பெறும். திரு. செட்டியாரின் இல்லத்தரசி கடலை சுண்டல், கொழுக்கட்டை இவற்றைத் த யா ரித் து அனுப்பிவிடுவார்கள். இவற்றையெல்லாம் சிறுவர்களாகிய நாங்களே பள்ளியில் கொண்டுவந்து சேர்ப்போம். பூசையைச் செட்டியாரே செய்வார். சிறுவர்கள் முறைவைப்பில் கலந்து கொள்வார்கள். நான்தான் சீதக்களப' தொடங்குவேன். வழிபாட்டிற்கு பிறகு நைவேத்தியப் பொருள்கள் பிள்ளைகட்குப் பகிர்ந்தளிக்கப் பெறும். பிறகு மகிழ்ச்சியுடன் பிள்ளைகள் வீடு திரும்பு &#fffs & Grf. மறுநாள் பிள்ளையாருக்குச் சாதாரண பூசைதான். மூன்றாம் நாள் செட்டியார் பின் தொடர, சிறுவர்கள் யாவரும் 'சீதக்களப' சொல்லிக் கொண்டே அண்மையி லுள்ள ஒரு கிணற்றுக்குச் சென்று பிள்ளையாரைத் தண்ணிரில் விட்டு வருவோம். திரும்பும்போதும் "சீதக்களப” நடை பெறும். சரசுவதி பூசை நவராத்திரி விழாவை ஒட்டிவரும். நவராத்திரி தொடங்குவதற்கு ஒரு திங்களுக்கு முன்னரே கோலாட்டப் பயிற்சி தொடங்கிவிடும். இக்காலத்தில் விற்கப் பெறும் வண்ணக் கோல்கள் அக்காலத்தில் அதுவும் குக்கிராமத்தில் கிடைப்பதில்லை. உள்ளுர்த் தச்சர்களுக்கு நல்ல வேலை. எப்படியோ பெற்றோர்கள் அடவியிலிருந்து வம்பேரங்குச்சியைக் கொணர்ந்து தச்சு ஆசாரிகளிடம் தந்து அழகிய முறையில் கோலாட்டக் குச்சிகளைத் தயாரித்துத் தந்து விடுவார்கள். இந்தக் கோல்களால் கோலாட்டம் நடைபெறும்போது கேட்கும் ஒலி காதுகளுக்கு இனிமையாக இருக்கும். பல்வேறு கோலாட்டப் பாட்டுகளைச் சொல்லித் தருவார் செட்டியார். (இப்போது ஒன்றுகூட என் நினைவுக்